தமிழ்நாடு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தமிழ்நாடு அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு

பணியிடங்கள், ஊதியம் மற்றும் தகுதிகள்: சரக்கரை காப்பாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14). கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.12,600 - ரூ.39,900 (Pay matrix-13). கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தகுதி. இரவு காவலர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12). கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தோட்ட பராமரிப்பாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12). கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். துப்புரவாளர் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.11,600 - ரூ.36,800 (Pay matrix-12). கல்வித்தகுதி: தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓதுவார் (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.12,600 - ரூ.39,900 (Pay matrix-13). கல்வித்தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதுடன், தேவாரப் பள்ளியில் 3 ஆண்டு காலப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மடைப்பள்ளி (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.13,200 - ரூ.41,800 (Pay matrix-14). தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோயிலின் நடைமுறைப்படி நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கவும், பூஜை சடங்குகளை அறிந்திருக்கவும் வேண்டும். ஸ்ரீபாதம் தாங்கி (1 பணியிடம்): ஊதியம்: மாதம் ரூ.10,000 - ரூ.31,500 (Pay matrix-10). தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதுடன், 2 ஆண்டுகள் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

 முக்கிய நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை: வயது வரம்பு:விண்ணப்பதாரர் 01.07.2025 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் அவசியம்.

விண்ணப்பம் பெறுதல்: hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது கோயில் அலுவலகத்தில் நேரில் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்

 யாரெல்லாம் தகுதியற்றவர்கள்?: நீதிமன்றத் தண்டனை பெற்றவர்கள், கடனைத் தீர்க்க முடியாதவர்கள், அரசு அல்லது கோயில் பணியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் கோயிலுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. 

 தேவையான ஆவணங்கள்: கல்விச் சான்றிதழ் நகல்கள், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, முன்னுரிமைச் சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்று நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும். 

 தபால் கட்டணம்: சென்னை மாவட்டத்தினர் ரூ.50-க்கான தபால் தலையும், மற்ற மாவட்டத்தினர் ரூ.75-க்கான தபால் தலையும் ஒட்டிய உறையை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 

 கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27.01.2026 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பதிவுத் தபாலில் (Registered Post) ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: செயல் அலுவலர், சென்னை அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், எண்.315, தங்கசாலை தெரு, சென்னை - 600003.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here