தன்னை விட 25 வயது மூத்தவருடன் குடும்பம் நடத்தும் பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

தன்னை விட 25 வயது மூத்தவருடன் குடும்பம் நடத்தும் பிரான்ஸ் அதிபர் வேட்பாளர்

🍎 *25 வயது மூத்த ஆசிரியையுடன் குடும்பம் நடத்தும் இமானுவேல்: பிரான்ஸ் அதிபர் வேட்பாளரின் சுவாரஸ்ய காதல்*

🥀 பள்ளியில் படிக்கும்போது 15 வயதில் வகுப்பு ஆசிரியை டிராக்னக்ஸ் என்பவரை காதலித்த பிரான்ஸ் அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோன், தனது 30-வது வயதில் அவரையே திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய தவகல் தற்போது வெளி யாகியுள்ளது. 2007-ல் திருமணம் நடந்தபோது டிராக்னஸுக்கு 55 வயது.

🥀 பிரான்ஸ் அதிபருக்கான 2-ம் மற்றும் இறுதிச் சுற்றுத் தேர்தல் வரும் மே 7-ம் தேதி நடைபெற வுள்ளது. முதல் சுற்று தேர்தலில் 23.75 சதவீத வாக்குகள் பெற்று மக்ரோன் முதலிடம் பிடித்துள்ளார்.

🥀 லி பென் 21.53 சதவீத வாக்குகள் பெற்று, 2-வது இடத்தில் உள்ளார். முதல் சுற்றில் தோல்வி அடைந்த வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர், 2-வது சுற்றில் மக்ரோனுக்கு வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

🥀 இதனால் மக்ரோனின் வெற்றி ஏறத்தாழ முடிவாகியுள்ளது.

🥀 இந்நிலையில் மக்ரோனைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது தனது 15-வது வயதில் (1993-ல்) ஒரு நாடக அரங் கேற்றத்தின் போது வகுப்பு ஆசிரியர் டிராக்னக்ஸ் மீது மக்ரோன் காதல் வயப்பட்டுள்ளார்.

🥀 அப்போது டிராக்னஸுக்கு 42 வயது. அவரது 15 வயது மகளும், மக்ரோனுடன் அதே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். இத னால் டிராக்னஸின் மகளைத் தான் அவர் காதலிக்கிறார்என அனை வரும் புரிந்து கொண்டிருந்தனர்.

🥀 ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பின் டிராக்னஸை வேறொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த மக்ரோன் தனது காதலை வெளிப்படுத்தி யுள்ளார். அப்போது 3 குழந்தை களுக்கு தாயாக இருந்த அவர் மறுப்பு ஏதும் சொல்லாமல் மக்ரோ னுடன் நெருங்கி பழகியுள்ளார்.

🥀 இதையடுத்து 2007-ல் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.

🥀 தற்போது 64 வயதான டிராக்னஸுக்கு 7 பேரக் குழந்தை கள் இருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here