சச்சின் டென்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

சச்சின் டென்டுல்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய பிரபலங்கள்

🍎 *சச்சின் டெண்டுல்கருக்கு வயது 44; உலகெங்கிலுமிருந்து குவியும் வாழ்த்துகள்*

🥀இந்திய ‘லிட்டில் மாஸ்டர்’ சச்சின் டெண்டுல்கருக்கு இன்று பிறந்தநாள். இதனையடுத்து உலகெங்கிலும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

🥀இன்று மும்பை இந்தியன்ஸ் அணியினர் சச்சின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். டெண்டுல்கருக்கு வாழ்த்து தெரிவித்த
*இந்திய கேப்டன் விராட் கோலி, “ஹேப்பி பர்த் டே பாஜி* கடவுள் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளிப்பாராக. எப்போதும் என் கிரிக்கெட் ஹீரோ சச்சினே” என்று கூறியுள்ளார் கோலி

🥀ட்விட்டரில் மிகவும் ‘பிசி’யாக இருந்து வரும் விரேந்திர சேவாக், *“இந்தியாவில் காலத்தை நிறுத்தும் மனிதனுக்கு.. ஹேப்பி பர்த் டே சச்சின்”*என்று ட்வீட்டியுள்ளார்.

🥀அனில் கும்ப்ளே, *“உலகம் கண்ட மிகவும் உத்வேகமான விளையாட்டு வீரர் சச்சின்”*என்றார். 

🥀கவுதம் கம்பீர், *“எல்லாம்வல்ல இறைவன் உங்கள் மீது தொடர்ந்து புன்னகைப்பார்வையை வீசட்டும்”* என்றார். 

🥀ஹர்பஜன் சிங், *“மகிழ்ச்சியாக இருங்கள், நன்றாக இருங்கள், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்”* என்று ட்வீட் செய்துள்ளார்.

🥀உமேஷ் யாதவ் தனது வாழ்த்துச் செய்தியில், *“சிறப்பான நாள், சிறப்பான மனிதர், சிறப்பான கொண்டாட்டம், உங்கள் கனவுகளும் ஆசைகளும் உண்மையாகட்டும்”* என்று கூறியுள்ளார். 

🥀மொகமது கயீஃப்: *”கோடி மக்களின் உணர்வுகளைத் தொட்டவர், எப்போதுமே நம் வாழ்வின் அங்கமாக விளங்குபவர் சச்சின்”*

🥀ஆடம் கில்கிறிஸ்ட்: ஹேப்பி பர்த் டே சச்சின் என்று ட்வீட் செய்துள்ளார்.

🥀மைக்கேல் கிளார்க்: *கிரேட் சச்சினுக்கு ஹேப்பி பர்த் டே... இனிவரும் நாளும் ஆண்டும் இனிதாக அமையட்டும்* என்று கூறியுள்ளார்.

🥀ரிஷப் பந்த்: *ஹேப்பி பர்த் டே சச்சின் சர், வரும் காலங்களிலும் எங்களைப் போன்ற லட்சக்கணக்கானோருக்கு தூண்டுகோலாக இருப்பீர்கள்,* என்றார்.

🥀குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங்: *“கிரிக்கெட் கடவுளுக்கு வாழ்த்துக்கள்”*

🥀கிரிக்கெட் கண்ட ஆகச்சிறந்த பேட்ஸ்மெனான சச்சின் டெண்டுல்கர் 34,357 ரன்களை அடித்த சத சதங்களின் நாயகர் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here