மதிய தமிழ் இணைய செய்திகள் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மதிய தமிழ் இணைய செய்திகள்

தமிழ் இணைய செய்திகள்
        05/04/2017
*🔴🔴அரசு துறைகள் பெயர் மாற்றம்..*

சென்னை: இரண்டு அரசு துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் பெயர், 'தொழிலாளர் நலன் மற்றும் தொழில் பாதுகாப்புத் துறை' எனவும், இளைஞர் நலன் மற்றும்
விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் பெயர், 'திறன் மேம்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை' எனவும், பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*துணை ஜனாதிபதி பதவி: ஆந்திர கவர்னர் நரசிம்மனுக்கு வாய்ப்பு*

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் கவர்னர் நரசிம்மன், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என தகவல்கள் வெளி வந்துள்ளன.துணை ஜனாதிபதியின் பதவி காலம் வரும் ஆகஸ்டு மாதம் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு இவருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

*திறமைக்கு பாராட்டு*

ஆந்திராவிலிருந்து, தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட போது எழுந்த பல்வேறு விஷயங்களை திறமையாகக் கையாண்டார் என அவரைப் பாராட்டுகின்றனர். அவர் 1945ல் அப்போதைய சென்னை மாகாணத்தில் பிறந்தவர். 1968 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியானார்.

*திருவண்ணாமலை: செங்கம் அருகே அம்மனூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் மறியல்; நெடுஞ்சாலையோரம் உள்ள கடையை ஊருக்குள் கொண்டுவர மக்கள் எதிர்ப்பு*

*ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! போலீஸார் மீது மு.க.ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு*

ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுவது தொடர்பாக தலைமைத்தேர்தல் அதிகாரியிடம் முறையிடுவோம் என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்கச்சென்ற தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் தி.மு.க மாணவரணியைச் சேர்ந்த பார்த்தசாரதி, ஷேக் முகமது உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூன்று பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஆர்.கே.நகர்த் தொகுதியில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது. ஜனநாயகத்தை படுகொலை செய்து பணநாயகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களை காவல்துறையினர் தப்பிக்க விடுகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது தொடர்பாக தலைமைத்தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடுவோம்' என்று தெரிவித்தார்

*அரியலூர்-கல்லங்குறிச்சி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.*

*அரியலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றான அருள்மிகு கல்லங்குறிச்சி கலியுக வரதராசப்பெருமாள் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று அதிகாலை துவங்கியது.*

*இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.*

*10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் திருத்தேர் விழா வரும் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.*

*அன்றைய தினம் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.*

*ஓடும் பஸ்ஸில் கண்டக்டரே பணப் பட்டுவாடா....*

*அடுத்த லெவலுக்கு மாறிய ஆர்.கே.நகர்...!*

_இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகர் தொகுதிக்குட்ட தண்டையார்பேட்டையில் ஓடும் பஸ்சில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. பேருந்தை பறிமுதல் செய்து நடத்துனரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்._
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கச் சென்ற திமுகவினருக்கு கத்திவெட்டு. காயமடைந்தவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.*

*திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி மற்றும் ஷேக் முகமது படுகாயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here