தமிழ் இணைய செய்திகள்
20-6-2017
@@ தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசாணை வெளியீடு.
@@@பெங்களூரு: ஆம்புலன்ஸ் செல்வதற்காக, ஜனாதிபதி சென்ற கான்வாயை நிறுத்திய போக்குவரத்து போலீசுக்கு உயர் அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.கடந்த சனிக்கிழமை (ஜூன் 17) மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைக்க வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஜ்பவன் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் மிக்க டிரினிட்டி சர்க்கிள் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் சப் இன்ஸ்பெக்டர் நிஜலிங்கப்பா ஈடுபட்டிருந்தார். அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை நோக்கி நோயாளியுடன் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது நிஜலிங்கப்பா, அங்கு அனைத்து வானங்களையும் நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தார். இதனை தெரிந்த உயர் அதிகாரிகள் நிஜலிங்காப்பாவை பாராட்டினர். வெகுமதி வழங்கினர்
@@ ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டதற்கு புதிய தமிழகம் கட்சி வரவேற்பு.பாஜகவுக்கும் மோடிக்கும் பாரட்டுகளை தெரிவித்து கொள்வதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் பேட்டி
@@@பா.ஜ., தலைமையிலான தே.ஜ.க., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, ராம்நாத் கோவிந்த், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்; தன் செல்வாக்கை பயன்படுத்தி உறவினர்களுக்கு சகாயம் செய்ய மறுத்தவர் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
@@@அமைச்சர்களை நீக்கும் அதிகாரமும் துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் என்னிடமே இருக்கிறது. இதனை பயன்படுத்தி அமைச்சர்கள் உள்ளிட்ட யாரையும் என்னால் நீக்க முடியும் என தினகரன் கூறினார்
@@@மலைப்பாதை ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் கரடி தாக்கி பலியானான்.லாஸ் ஏஞ்சல்ஸ்
@@@அரியானா மாநிலம் சோகனாவில் உள்ள நொய்டாவில் நேற்று இரவும் ஒரு பெண் ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். அரியானா குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் சோகனா சாலையில் நடந்து சென்ற போது வேகமாக வந்த கார் பெண் அருகே திடீர் என்று நின்றது. காரில் இருந்தவர்கள் அந்தப்பெண்ணை காருக்குள் தூக்கிபோட்டு கடத்திச் சென்றனர்.ஓடும் காரிலேயே அந்தப் பெண்ணை கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யபட்டார். பின்னர் நொய்டாவில் ஒரு ஆஸ்பத்திரி அருகே வந்த போது அந்தப் பெண்ணை காரில் இருந்து கீழே ரோட்டில் வீசி விட்டு சென்று விட்டனர். அங்கிருந்தவர்கள் உதவியுடன் குருகிராமில் உள்ள தனது வீட்டுக்கு சென்று விட்டாள். இந்த விவரம் தெரியவந்ததும் நொய்டா போலீசார் பாதிக் கப்பட்ட பெண்ணிடம் புகார் பெறுவதற்காக குருகிராம் விரைந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் எதுவும் செய்யவில்லை. இளம் பெண் ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூரை சேர்ந்தவர்.இவர் சோகனாவில் உறவினர் ஒருவரை பார்க்க வந்து உள்ளார்-
@@@ அமெரிக்காவில் தொழுகை முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
🇮 ‘ஓட்டுனர் இல்லா பறக்கும் டாக்சி’யின் சோதனை ஓட்டம் துபாயில் வெற்றி பெற்றுள்ளது
தமிழ் இணைய செய்திகள்
🇮 2017 - 18 கல்வியாண்டில் லேப்டாப் வாங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு
ராமேஸ்வரம் 4 வீதிகளில் வாகனம் செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி
🇮 மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதார் பள்ளிக்கு ஜெ.வின் தோழி சசிகலா கொடுத்த ரூ.10 லட்சம் செக் பவுன்ஸ் ஆகிவிட்டது. மேலும்,காது கேட்காத குழந்தைகளுக்கு அவர் வழங்கிய கருவிகளுக்கான பணத்தையும் செலுத்தாததால், அந்த கருவிகள் குழந்தைகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியுள்ளது
🇮🇳 ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற ஜூன்30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றம் கூடும் என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்துள்ளார்
** ரியாத் இந்தியன் சங்கத்தின் இப்தார் நிகழ்ச்சி ரியாதிலுள்ள மதீனா சூப்பர்மார்க்கெட் மண்டபத்தில் கடந்த 17ஆம் தேதி தலைவர் பாலச்சந்திரன் முன்னிலையில் நடந்தது. இதில் நோன்பின் முக்கியத்துவம், நோன்பு எதற்காக நோற்கப்படுகிறது, உண்ணாமலும் பருகாமலும் இருப்பது நோன்பு அல்ல என்றும் மனதளவிலும் உடலளவிலும் மற்றவரை காயப்படுத்தாமல் இருபவனே நோன்பாளி என்றும் தனது உரையை கூறி துவங்கி வைத்தார் லத்தீப் ஓமஷேரி
** தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் உட்பட 15,664 பேருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. காலியாக உள்ள 15,664 பணியிடங்களுக்கு 5லட்சத்து 80000 பேர் தேர்வு எழுதினர்
** திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் பெண்கள் மதுக்கடையை உடைத்தனர். செய்யாறு டாஸ்மாக் மதுக்கடை முன்பு விவசாயி பாஸ்கரன் நேற்று கொலை செய்யப்பட்டார். குடிபோதையில் விவசாயி கொல்லப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவேசம் அடைந்தனர்
** தமிழ்நாடு தொழில் நிறுவனங்களில் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள் தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது---
** விவசாயிகளின் பயிர்க்கடனை ரத்து செய்ய மத்திய அரசு பரிசீலனை செய்யவில்லை என்று டெல்லியில் பேட்டி அளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கையோடு இருந்த விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது
** மாடுகள் விற்பனை தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேட்டி அளித்துள்ளார்
** கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோயைத் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பும் தடுப்பு மருந்து ஒன்றை மனிதர்கள் மீது சோதனைரீதியில் விஞ்ஞானிகள்செலுத்தத் தொடங்கிவிட்டனர்.எலிகள் மீது நடத்தப்பட்ட சோதனைகள், இந்த தடுப்பு மருந்து ரத்தக்குழாய்களில் கொழுப்பு தேங்குவதை தடுக்க உதவுகின்றது என்று காட்டுவதாக நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ரத்தத்தில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குவதற்கு உடல் நோய் எதிர்ப்பு அமைப்பை இந்த தடுப்பு மருந்து தயார் செய்கிறது.தற்போது கொழுப்பைக் குறைக்க, உலகெங்கிலும்,ஸ்டாட்டின் என்ற மருந்தை பல லட்சக்கணக்கானோர் தினமும் எடுத்துக்கொள்கின்றனர்.இந்த தடுப்பு மருந்து ஸ்டாட்டினுக்கு பதிலாகவோ அல்லது அதனுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளவோ முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.இந்த சோதனைகள் முடிவடைய ஆறு ஆண்டுகள் ஆகலாம் என்று கூறப்படுகிறது
** ஆதார் அடையாள அட்டையை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களுக்கு கட்டாயப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வங்கி கணக்கு தொடங்குதல், வருமான வரி செலுத்துதல்,செல்போன் இணைப்பு பெறுதல், திருப்பதியில் லட்டு பெற, உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நோயாளிகள் ஆம்புலன்சில் செல்ல வேண்டுமானால் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இருந்தால்தான் அரசின் இலவச ஆம்புலன்சில் செல்ல முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
*பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்*
*நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது: மத்திய அரசு தகவல்*
பீகார் மாநில ஆளுநர் ராஜினாமா : மேற்கு வங்க ஆளுநர் கேஷரி நாத் திரிபாதி கூடுதல் பொறுப்பு
*பி.டெக். படித்தால், ஒரே நேரத்தில் இரட்டைப் பட்டம்: சென்னை ஐஐடி அறிவிப்பு*
பி.டெக். இளநிலை பட்ட மாணவர்களும் இரண்டு பட்டங்களை ஒரே நேரத்தில் பெறும் வகையில் புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
சென்னை ஐஐடியில் 5 ஆண்டுகள் கொண்ட பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரட்டைப் பட்டப்படிப்பு இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் இரண்டிலும் ஒரே துறை சார்ந்த படிப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில் பி.டெக். இளநிலை படிப்புடன் தொடர்புடைய வேறு துறை சார்ந்த எம்.டெக். படிப்பை தேர்வுசெய்து படிக்கும் வசதியுடன் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.டெக். மற்றும் எம்.டெக். இரட்டைப் பட்டப்படிப்பு திட்டத்தை சென்னை ஐஐடி நடப்பு ஆண்டு முதல் அறிமுகம் செய்கிறது.
ஏற்கெனவே இரட்டைப் பட்டப்படிப்பில் சேர்ந்த மாணவர்கள் மட்டுமல்லாமல், 4 ஆண்டுகள் பி.டெக். படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் இதில் இணைய முடியும். ஆனால், அவர்கள் ஐந்தாவது பருவத்தின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரி (சி.ஜி.பி.ஏ.) 8 புள்ளிகள் பெற்றிருக் *பிளஸ் 2 தேர்வு மறுகூட்டல் முடிவு வெளியீடு*
*தமிழகத்தில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்*
மாணவர்கள் சேராததால் 11 பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் மூடப்படுகின்றன.
👉 *சென்னையில் மேக்னா பொறியியல் கல்லூரி,*
👉 *ஸ்ரீரங்கம்பாள் கட்டட வடிவமைப்பு கல்லூரி*
👉 *கோவையில் விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி,*
👉 *சசி பிஸினஸ் ஸ்கூல்*
👉 *மகாராஜா பிரித்வி பொறியியல் கல்லூரி*
👉 *திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் கல்லூரி,*
👉 *ஆர்.வி.எஸ்- கே.வி.கே நிர்வாக கல்லூரி*
👉 *திருச்சியில் சுவாமி விவேகானந்தா நிர்வாகவியல் கல்லூரி*
👉 *மதுரை சி.ஆர் பொறியியல் கல்லூரி,*
👉 *மைக்கேல் மேலாண்மை கல்லூரி*
👉 *நெல்லையில் ஜோ சுரேஷ் பொறியியல் கல்லூரியும் மூடப்படுகிறது.*
தமிழ் இணைய செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக