🍎 சிவப்பு சிக்னல் தாண்டினால் ரயில் தானாக நிற்கும் தொழில்நுட்பம்:
🍏 சென்னை - செங்கல்பட்டு, அரக்கோணம் வழித்தடங்களில் அறிமுகம்:
🥀 சிவப்பு சிக்னல் தாண்டினால் ரயில் தானாக நிற்கும் தொழில்நுட்பத்தை சென்னை செங்கல்பட்டு, அரக்கோணம் ஜோலார்பேட்டை வழித்தடங்களிலும் விரைவில் செயல்படுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
🥀 நாடு முழுவதும் ரயில் தொடர் பான பல்வேறு விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறப்பதாக தேசிய குற்றப்பதிவுக் காப்பகம் தெரிவிக்கிறது.
🥀 ரயில்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங் களைப் பொறுத்தவரை, கடந்த 2012 ஏப்ரல் முதல் 2017 மார்ச் வரையி லான 5 ஆண்டுகளில் மொத்தம் 686 விபத்துகள் நடந்துள்ளன.
🥀 இதில் 1,011 பேர் இறந்துள்ளனர். 1,634 பேர் காயம் அடைந்துள்ளனர். ஒட்டு மொத்த விபத்துகளில் 50 சதவீதம் ரயில்கள் தடம் புரண்டதால் ஏற்பட்டுள்ளது.
🥀 ரயில்வே துறையில் சிக்னல் களின் இயக்கம் ரயில்களைப் பாது காப்பாக இயக்க முக்கியப் பணி யாற்றுகின்றன. சிக்னல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகை யில் ரயில்பாதையில் பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட்பம் அமைக்கும் வசதியை பல்வேறு இடங்களில் விரிவுபடுத்த ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
🍅 இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
🥀 சென்னை கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்பாதையில் பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட்ப வசதி, கடந்த 2008-ம் ஆண்டு சோதனை முயற்சியில் தொடங்கப்பட்டது.
🥀 அதன்படி, ரயில் பாதைகளில் இருக் கும் சிக்னலுடன், பாதைகளில் ஆங் காங்கே சென்சார் பொருத்தப்பட்டு கேபிள் மூலம் ரயில் இன்ஜினுடன் தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது.
🥀 இதனால், ரயில்கள் சிக்னல் அருகே செல்லும்போது சிவப்பு சிக்னல் இருந்தால் சுமார் 500 மீட்டர் தூரம் வரும்போதே படிப்படியாக வேகம் குறையும். இதுவே, சிவப்பு சிக்னல் தாண்டினால் ரயில் தானாகவே நிறுத்தப்படும்.
🥀 இந்த புதிய தொழில்நுட்பத்தால் மழை மற்றும் பனிக் காலங்களில் ரயில்கள் தாமதமாக வருவது குறையும். ரயில்கள் மோதிக் கொள் ளும் விபத்துகள் முற்றிலும் தடுக் கப்படும்.
🥀 இந்தத் தொழில்நுட்பத் தால் நல்ல முன்னேற்றம் ஏற்பட் டுள்ளதால், அரக்கோணம் மார்க் கத்திலும் விரிவுப்படுத்தப்பட்டது.
🥀 இந்நிலையில், நாடுமுழுவதும் தானியங்கி சிக்னல்கள் உள்ள புறநகர் மின்சார ரயில்கள் பாதை மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பாதைகளில் சுமார் 3,330 கி.மீ. தூரத்துக்கு ரயில்கள் பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
🥀 முதல் கட்டமாக 1,244 கி.மீ தூரத் துக்கு சென்னை, கொல்கத்தா, டெல்லி புறநகர் பாதைகளில் உட னடியாக நிறுவ இருக்கிறது. இதில், சென்னை - தாம்பரம் செங்கல் பட்டு புறநகர் ரயில்பாதையும், அரக் கோணம் ஜோலார்பேட்டை ரயில் பாதையும் அடங்கும் என்றார்.
🍊 மாற்றம் தேவை:
🥀 இது தொடர்பாக ரயில் ஓட்டுநர் கள் சிலர் கூறுகையில்,
🥀 ‘‘ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை தொழில்நுட் பம் சிறப்பாக இருக்கிறது. சிவப்பு சிக்னல் தாண்டிய பிறகு, ரயில் தானாக நிற்கும் தொழில்நுட்பத்தை, சிக்னல் அருகே நெருங்கும்போதே ரயில் தானாக நிற்கும் வகையில் புதிய மாற்றம் செய்ய வேண்டும். அப்போதுதான் ரயில், சிக்னல் கடந்து செல்வதை முற்றிலும் தடுக்க முடியும்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக