தமிழ் இணைய செய்திகள்
🚨இன்றைய🚨செய்திகள்🚨
22/06/17
இலங்கை சிறையில் உள்ள 20 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதத்தில் வலியுறுத்தல்.
காஷ்மீர் : காக்போராவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ஏகே-47 ரக துப்பாக்கிகள் 3 பறிமுதல்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா, பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்ட 186 பேரை விசாரிக்க வேண்டும் என்ற வழக்கில் நாளை உத்தரவு : நீதிபதி.
நான்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு டெல்லி போலிஸ் கடிதம். டிடிவி தினகரன் பங்கேற்ற குரல் மாதிரிகளை அளிக்குமாறு கோரிக்கை.
மத்திய அரசை எதிர்த்து குரல் எழுப்பும் திறன் தமிழக அரசுக்கு இல்லை -முக.ஸ்டாலின்.
பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்கோவிந்துக்கு ஆதரவு தெரிவிக்க எடப்பாடி தில்லி பயணம். தேடி வந்து ஆதரவு கேட்டால் மனிதன். தேடிப்போய் ஆதரவு அளித்தால் அடிமை - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
நெடுந்தீவு அருகே கைதான தமிழக மீனவர்கள் 4 பேருக்கு ஜூலை 6ஆம் தேதி வரை காவல் : ஊர்க்காவல்துறை நீதிமன்றம்.
பிஎஸ்எல்வி சி-38 ராக்கெட் 31 செயற்கை கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது - இஸ்ரோ தலைவர் கிரண்குமார்.
இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் தாக்கியதாக ராமேஸ்வரம் மீனவர்கள் புகார் இலங்கை கடற்படையால் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 5 பேர் குற்றச்சாட்டு.
பாஜக ஜனாதிபதி வேட்பாளாருக்கு முதல்வர் ஆதரவு தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது : தமிழிசை.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் பயிற்சியாளர் கும்ப்ளேவும் ஆறு மாதமாகப் பேசிக் கொள்ளவில்லை என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது.
மங்கள்யான் ஆயிரம் நாட்களை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது;நகர்புற வளர்ச்சி உள்ளிட்டவற்றிற்கு செயற்கைக்கோள்உதவும் : இஸ்ரோ தலைவர் கிரண்குமார்.
தொழிலதிபரிடம் பணம் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு ஜூலை 7 வரை காவல் - கோவை நீதிமன்றம் உத்தரவு.
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டெல்லி சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரை இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓ.பன்னீர் செல்வம் அணி ஆதரவு.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக டிடிவியிடம் பேசவில்லை மரியாதை நிமித்தமாக தினகரனை சந்தித்து பேசினேன் : நடிகர் கருணாஸ்.
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 30 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியீடு.
தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. குறுக்கு விசாரணை நடத்த அவகாசம் கோரியதை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றது.
ஜனாதிபதி தேர்தலில் சசிகலாவின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.உடல்நிலை சரியில்லாததால் முதலமைச்சர் நடத்திய இஃப்தாரில் பங்கேற்கவில்லை : நடிகர் கருணாஸ்.
தமிழ் இணைய செய்திகள்
தமிழகத்தில் அங்கன்வாடி பள்ளிகளில் ஆங்கில வழயில் கற்பிப்பது பற்றி அரசு பரிசீலனை : அமைச்சர் செங்கோட்டையன்.
பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய 15 பேர் மீதான தேச துரோக குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.
அரசுக்கலைக் கல்லூரியில் பணியாற்றும் கணினி பயிற்றுனர்கள் தலைமைச் செயலகத்தில் தர்ணா ஊதிய உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
ஈராக்கின் 840 ஆண்டுகள் பழமைவாய்ந்த மசூதி, ஐஎஸ் இயக்கத்தினரால் வெடி வைத்து தகர்ப்பு.
சென்னை சில்க்ஸ் கட்டட இடிபாடுகளிலிருந்து 2 பாதுகாப்பு பெட்டகங்கள் கண்டுபிடிப்பு.400 கிலோ தங்கம், 2000 கிலோ வெள்ளி இருந்திருக்கலாம் : காவல்துறை.
ஆதிக்காதலின் நினைவுக்குறிப்புகள் என்ற கவிதை தொகுப்பிற்காக எழுத்தாளர் ஜெயபாரதிக்கு சாகித்ய அகாடமியின் "யுவ புஸ்கார்" விருது அறிவிப்பு.
அதிமுகவினர் யாருக்கும் எஜமானர்களும் இல்லை; அடிமைகளும் இல்லை - சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு.
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளித்த அதிமுகவிற்கு பொன்.ராதா நன்றி.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் வரி செலுத்த தேவையில்லை : நிர்மலா சீதாராமன்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிருந்தால் பாஜக அதிக வாக்கில் வெற்றி பெறும் : பொன். ராதா.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்த ஓபிஎஸ்க்கு அமித்ஷா நன்றி.
ஆப்கானிஸ்தானில் கார் குண்டுவெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு.
சிறையில் உள்ள பேரறிவாளனை விடுவிக்க வேண்டும் : பேரவையில் தமிமுன் அன்சாரி கோரிக்கை.
பள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி உட்பட 4 பேரை குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் : தமீமுன் அன்சாரி.
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறினார்.
நடிகர் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.
பாஜக ஜனாதிபதி வேட்பாளருக்கு அதிமுகவின் ஆதரவு எம்ஜிஆர், ஜெயலலிதா வகுத்த அரசியல் பாதைக்கு மாறாக உள்ளது : திருநாவுக்கரசர்.
தமீழ் இணைய செய்திகள்
கடுமையான பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்க எந்த நிவாரணமும் வழங்காத BJP அரசை அதிமுக அம்மா அணி ஆதரிப்பது சந்தர்ப்பவாதம் - திருநாவுக்கரசர்.
விவசாயக் கடன் தள்ளுபடி பேஷனாகிவிட்டது - வெங்கையா நாயுடு விமர்சனம்.
திருச்சியில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்படும்.வேலூர் கோட்டையில் அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படும் : அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.
டாஸ்மாக் கடைகள் அமைப்பதில் கிராமம் மற்றும் நகர்புறங்களுக்கு உள்ள தனித்தனி விதிகளை ரத்து செய்யக்கோரி வழக்கு : தமிழக தலைமை செயலாளர் ஜூலை 19-ம் தேதி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
15 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை கோரிய வழக்கில் உயர்கல்வி செயலாளர், ஏஐசிடிஇ பதில்தர உயர்நீதிமன்ற கிளை ஆணை.
14ஆண்டுக்குமேல் சிறையில் உள்ள கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பதுபற்றி முதல்வரிடம் ஆலோசித்து முடிவுஎடுக்கப்படும் - அமைச்சர் சிவி சண்முகம்.
பேரறிவாளன் உள்ளிட்டவர்களை விடுதலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் - அமைச்சர் சிவி சண்முகம்.
ஜம்மூ - காஷ்மீர்: பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்.தமிழ் இணைய செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக