தமிழ் இணைய செய்திகள்
03/07/2017:
🚨 🚨🚨🚨🚨 🚨
GST *சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்கள்*
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
GST ன் *இணைய தளத்தில் நேரடியாக* *இணைக்கப்பட்ட* *கட்டணமில்லா* *தொலைபேசி*
*01204888999*
*வணிக* *வரித்துறையின்*
*தொலைபேசி* *உதவி எண்*
*18001036751 ல்* *தொடர்பு கொள்ளலாம்*
பொதுநலன் கருதி
*-ப.கருப்பசாமி-*
சிவகாசி -
*கேரளா: நீர்வீழ்ச்சியில் குளித்த தூத்துக்குடியை சேர்ந்த 4 பேர் பலி?*
*கதிராமங்கலம் மக்கள் முற்றுகையிடலாம் என்ற தகவலால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிப்பு*
*கதிராமங்கலம் மக்கள் முற்றுகையிடலாம் என்ற தகவலால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி இல்லம் மற்றும் ஆளுநர் மாளிகையிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் விளை நிலத்தில் எண்ணெய் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.*
*மரண அடியில் திரைத்துறை!*
பல்வேறு சலுகைகளில் இதுவரை குளிர் காய்ந்து வந்த திரைத்துறைக்கு ஜிஎஸ்டி வரவால் மரண அடி கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மாநில அரசும் சத்தமில்லாமல் கேளிக்கை வரியை 30% விதித்து அதை வசூலிக்கும் உரிமையை உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுத்துள்ளது. இதன் மூலம் டிக்கெட் கணிசமாக அல்ல.... அதிகமாகவே உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு திரையரங்குகள் தள்ளப்பட்டுள்ளது.
இதை எதிர்த்து நாளை முதல் திரையரங்குகள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவளிக்கவில்லை அவர்கள் தரப்பில் கூறும் போது "வேலை நிறுத்ததால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மாறாக சமூக வலைத்தளங்களில் வரவேற்றே உள்ளனர். *தமிழ் சமூகத்தை பிடித்த பிசாசு எந்த வழியில் ஒழிந்தாலும் மகிழ்ச்சி என பதிவிட்டு திரைத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளனர்.*
திரையரங்குகளுக்கு பதிலாக தொலைக்காட்சியில் நேரடியாக படங்களை ரீலிஸ் செய்யும் முறை அரங்கேற வாய்ப்புள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் பேச்சுக்கள் துவங்கியுள்ளது.
தமிழ் இணைய
*செய்திக்காக......!*
*கொச்சி: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர முயன்ற, 350 இளைஞர்களை, 'ஆப்ரேஷன் பீஜியன்' என்னும் திட்டத்தின் கீழ், உளவுத் துறை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்*
*அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு: இணையதளத்தில் திங்கட்கிழமை முதல் பதிவு செய்யலாம்*
அகில இந்திய ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வுக்கு இணையதளத்தில் திங்கட்கிழமை முதல் பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உட்பட 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 456 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரி, சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்து 30 பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதிப் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. இதற்கான பதிவு www.mcc.nic.in என்ற இணையதளத்தில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.
தமிழ் இணைய செய்திகள் *🔴அட்டர்னி ஜெனரலாக பதவியேற்றார் வேணுகோபால்*
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்ட கே.கே. வேணுகோபால் பதவியேற்று கொண்டார். அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தஹி சில நாட்களுக்கு முன்பு பதவி விலகினார். இதனையடுத்து புதிய அட்டர்னி ஜெனரலாக கே.கே.வேணுகோபால் நியமிக்கப்பட்டார். வேணுகோபால், பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருது பெற்றவர். மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவியேற்று கொண்டார். 2 ஜி முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகியுள்ளார்.
*🔴ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி. கிடையாது*
நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை ஜிஎஸ்டி.,யை அமல்படுத்துவதற்கு முன்பு இருந்த விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம்.அவற்றின் விலை உடனடியாக உயர்த்தப்படாது.
ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
சில்லரை மருந்து விற்பனையாளர்கள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம். அந்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., யுடன் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக