📗📕 *_பள்ளிகளில் உபரியாக உள்ள 5,000 ஆசிரியர்களை வட மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு_* › தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

📗📕 *_பள்ளிகளில் உபரியாக உள்ள 5,000 ஆசிரியர்களை வட மாவட்டங்களுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு_* › தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது..

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

தென் மாவட்ட அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் மே மாதம் நடத்தப்படும் கவுன்சிலிங் மூலம், அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுவர். ஆனால், 2011க்கு பின், பள்ளிகள் திறந்த பின், ஜூலையில், இந்த கவுன்சிலிங் நடத்தப்பட்டது.

இதனால், பாதி பாடங்களை ஒரு ஆசிரியரும், மீதி பாடத்தை மற்றொரு ஆசிரியரும் நடத்தும் நிலை ஏற்பட்டது; மாணவர்களுக்கு கற்பித்தலில் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கு தீர்வு காண, இந்தாண்டு, பள்ளிகள் திறக்கும் முன், மே மாதமேஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப் பட்டது. இதில், 10 ஆயிரம் பேர் வரை, இட மாறுதல் பெற்றனர்.
இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங் களிலும், வேலுார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, அரியலுார், பெரம்பலுார் போன்ற மாவட் டங்களிலும், போதிய மாணவர்கள் இருந்தும், பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகஉள்ளன.

அதேநேரத்தில், தென் மாவட்டங்களில், 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக, பள்ளி கல்விதுறை கண்டறிந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில், தற்போது மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது; ஆக., 31க்குள், மாணவர் சேர்க்கையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு, அவர்களின் விகிதத்தை விட அதிகமாக உள்ள உபரி ஆசிரியர்களை, வட மாவட்டங்களுக்கு மாற்ற, பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்இணைய செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here