. ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு விலை போன 14 எம்எல்ஏக்களை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கிய காங்கிரஸ் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

. ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு விலை போன 14 எம்எல்ஏக்களை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கிய காங்கிரஸ்


ராஜ்யசபா தேர்தலில் மாற்றி ஓட்டு போட்ட 14 குஜராத் எம்எல்ஏக்கள்.. அதிரடியாக சஸ்பெண்ட் செய்த காங். Veera Kumar Oneindia Tamil டெல்லி: குஜராத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் 6 வருடங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 3 ராஜ்யசபா காலியிடங்களுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில், சார்பில் அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றிபெற்றனர். காங்கிரசின் அகமது படேல் வெற்றி பெற்றார்.  அதேநேரம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இரண்டுபேர் மாற்றி ஓட்டு போட்ட விவரத்தை வெளிப்படையாக கூறினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததால் அவ்விருவர் வாக்குகளும் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 
அதேநேரம், தேர்தலுக்கு முன்பே சங்கர்சிங் வகேலா உட்பட 7 பேர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்தனர். அவர்கள் பாஜக வேட்பாளர்களுக்கே தேர்தலில் வாக்களித்தனர். இந்நிலையில் கட்சி மாறி ஓட்டு போட்டதாக வகேலா உட்பட 14 காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக காங்கிரஸ் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. tamiloneindia


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here