🍎 *மீண்டும் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்???* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🍎 *மீண்டும் தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்???*

🥀உள்ளாட்சி தேர்தலை, மேலும் தள்ளிப்போடும் 
நடவடிக்கைகளில், மாநில தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.

🥀கடந்தாண்டு, இதே மாதம் உள்ளாட்சி தேர்தலை, இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது.

🥀 மனு தாக்கல் முடிந்த நிலையில், தி.மு.க., தொடர்ந்த வழக்கில், தேர்தல் நிறுத்தப்பட்டது. ஆரம்பத்தில், தேர்தலை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளில், மாநில தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டியது.

🥀ஆனால், 2016 டிசம்பரில், ஜெயலலிதா மறைந்த பின், அரசியல் நிலவரம் மாறியது. இதனால், ஆளும் கட்சியில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, தலைமை தேர்தல் கமிஷன் இன்னும் தீர்மானிக்கவில்லை.

🥀இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மீண்டும் நடத்துவதற்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாமல், மாநில தேர்தல் கமிஷன் கிடப்பில் போட்டுள்ளதாக, தி.மு.க., வழக்கு தாக்கல் செய்துள்ளது.

🥀 இருப்பினும், அதற்கு அசராமல், தேர்தலை தள்ளிப்போடும் மறைமுக நடவடிக்கைகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கிஉள்ளது.

🥀 இதற்காக, வார்டுகள் மறுசீரமைப்பு பணிகள், கையில் எடுக்கப்பட்டுள்ளன.
🥀சமீபத்தில், மாநில தேர்தல் கமிஷனர், மாலிக் பெரோஸ்கான் தலைமையில், வார்டு மறுசீரமைப்பு கமிஷனின் கூட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், மறைமலை நகரில் நடந்தது.

🥀அதில், அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் பங்கேற்றனர். வார்டு மறுசீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

🥀ஆனால், கலெக்டர்கள் பலரும், 'டெங்கு' ஒழிப்பு, பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளில், கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், வார்டு மறுவரையறை பணிகள் தள்ளிப்போகும் வாய்ப்புள்ளது.

🥀 இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல், காலம் கடத்துவதற்கு, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here