தமிழ் இணைய செய்திகள்             09/11/2017    வருமானவரி சோதனை ஒரு பார்வை - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

  தமிழ் இணைய செய்திகள்             09/11/2017    வருமானவரி சோதனை ஒரு பார்வை

 🌹தமிழ் இணைய செய்திகள் 🌹
            09/11/2017
   வருமானவரி சோதனை ஒரு பார்வை

*_✴🇮🇳✴தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட உள்ளிட்ட 187 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை_*

சென்னை : டிடிவி அணியின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வேலுகார்த்திகேயன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திவாகரன் ஆதரவாளர் வடுவூர் அக்ரி ராஜேந்திரன், மன்னார்குடி சுஜய், செல்வம் வீட்டிலும்,மன்னார்குடியில் திவாகரன் உதவியாளரான முன்னாள் கவுன்சிலர் ராசுபிள்ளை வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா குடும்பத்தினரின் வீடுகள், அவர்கள் நடத்தும் நிறுவனங்களில் வருமான வரி நடத்தி வருகின்றனர். சசிகலாவுக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை  நடத்தி வருகின்றனர்
தமிழ் இணைய செய்திகள்

*_✴🇮🇳✴தஞ்சையில் சசிகலா மற்றும் தினகரனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை_*

தஞ்சை: சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திலை தொடர்ந்து, மன்னார்குடி அருகே சுத்தரக்கோட்டையில் சசிகலா சகோதரர் திவாகரனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் உள்ள மேலவஸ்தாவில் தினகரன் உறவியினர் மருத்துவர் வெங்கடேஷ் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் சசிகலாவின் சகோதரர் விநோதகன் மகன் மகாதேவன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது.    

*_✴🇮🇳✴சசிகலாவுக்கு சொந்தமான 110 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை_*

 தஞ்சை: சசிகலாவின் அண்ணன் மகனான மறைந்த மகாதேவன் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி கந்தர்வகோட்டையில் உள்ள செங்கமலத்தாயார் கல்லூரியில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சையில் டாக்டர் வெங்கடேஷ் சசி அண்ணன் சுந்தரவத்தனத்தின் மகன், மற்றும் திவாகரன் நண்பர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
 
: *_✴🇮🇳✴சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில் சோதனை_*

திருச்சி : திருச்சியிலுள்ள சசிகலாவின் உறவினர் கலியபெருமாள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மன்னார்குடி: திவாகரன் நடத்தும் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் அன்பு வீட்டிலும்,சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிலும்,அருளானந்த நகரில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டிலும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. இரண்டு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தினகரன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. 
http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴அடையாறில் உள்ள தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை_*

சென்னை : சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இரண்டு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தினகரன் வீட்டில் சோதனை நடந்து வருகிறது. போலி நிறுவனங்களை தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதாக கணக்கு காட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.  

*_✴🇮🇳✴புதுச்சேரி அருகே டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை சோதனை_*

புதுச்சேரி : புதுச்சேரி அருகே டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை  வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. ஆரோவில் அருகே பொம்மேரிபாளையத்தில் டிடிவி தினகரனின் பண்ணை உள்ளது. பண்ணைக்குள்  உள்ள  வீட்டில் காலை 7 மணிக்கு ஆரம்பித்த சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. 

: *_✴🇮🇳✴போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் வருமான வரி சோதனை_*

சென்னை : சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது ,  போலி நிறுவனங்களை தொடங்கி நஷ்டம் ஏற்பட்டதாக ளமல்லி காட்டியதாக புகார் எழுந்ததை அடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.  

*_✴🇮🇳✴அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் சோதனை மூலம் மிரட்டுகிறார்கள் : ஜெயா டிவி வழக்கறிஞர் காசிநாதபாரதி_*

சென்னை : அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் சோதனை மூலம் மிரட்டுகிறார்கள் என்று ஜெயா டிவி வழக்கறிஞர் காசிநாதபாரதி தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை சோதனையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்ட அவர் மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்பவர்கள் மீது சோதனை மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது  என்றும் கூறினார். இதற்கிடையே பாஜகவின் அணியாக வருமான வரித்துறை உள்ளது என்றும் வரி ஏய்ப்பு நடந்ததாக இருந்தால் முதலில் நோட்டீஸ் தராதது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

*_✴🇮🇳✴கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை_*

கோவை: கோவையில் 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மணல் ஆறுமுகசாமி வீடு, அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சஜீவனுக்கு சொந்தமான பர்னிச்சர் கடை உள்பட கோவையில் 7 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. 

: *_✴🇮🇳✴சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை: நாஞ்சில் சம்பத்_*

சென்னை: அரசியல் உள்நோக்கத்திலேயே வருமானவரி சோதனை என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். சோதனையால் நாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஆச்சர்யப்பட எதுவுமில்லை என்று டி.டி.வி. ஆதரவாளர் சம்பத் கூறியுள்ளார்.http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com
*_✴🇮🇳✴சசிகலாவின் வழக்கறிஞர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை_*

நாமக்கல்: சசிகலாவின் வழக்கறிஞராக இருந்துவரும் செந்தில் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.  சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.
இச்சோதனை மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here