விளம்பரம் நம்மல எப்படியெல்லாம் மாற்றியிருக்கு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

விளம்பரம் நம்மல எப்படியெல்லாம் மாற்றியிருக்கு

விளம்பரம்

நம்மல எப்படியெல்லாம் மாற்றியிருக்கு

உப்பில் பல் தேய்த்தது தவறு என்று நம்ப வைத்ததும் விளம்பரம்தான். இன்று உங்க பேஸ்டில் உப்பு இருக்கா என்று காஜல் அகர்வால் கேட்பதும் விளம்பரம் தான்.

வாங்கும் போதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் நாம் வாங்கும் ஒரே பண்டம் தங்கம்தான். அதை சந்தோஷமாக சிரித்தபடி வாங்க வைத்தது "வளையல் திருவிழா"...விளம்பரம்தான்.

சரி..அதை அதே 30 சதவிகிதம் வரை நஷ்டத்துடன் விற்கும் போதும் சிரித்தபடி நம்மை விற்று "கனவுகளை நினைவாக்க" சொல்வதும் விளம்பரம்தான்.

3 லட்சம் சதுர அடியில் அரண்மனை உங்களுக்காக கட்டப்படுவதாக சினேகா சத்தியம் செய்வது எப்பேர்பட்ட மகிழ்ச்சி.. ! அத்தனை பெரிய கட்டிடத்தில் நீங்கள் காரில் வந்தாலும் உங்களுக்கு "பார்க்கிங்" கூட கிடையாது என்பது உங்களுக்கு புரிவதில்லை. எல்லாம் விளம்பரம்தான்.

1000 ரூபாய் புடவையை 3000 ரூபாய்க்கு வாங்கி வெளியே வரும் போது ஒரு தொன்னை சக்கரைபொங்கல் தருகிறான் பாருங்கள். அவன் நல்லவன். 30 வினாடி விளம்பரத்தில் நடிக்க கமலுக்கு 3 கோடி தரும் அவர் அதை யார் தலையில் கட்டுவார் என்று கேட்க நம்மை மறக்க அடிப்பதும் விளம்பரம்தான்.

விற்கப்படும் வீடுகளுக்கு மனைகளுக்கு சாக்கடை வசதிகள் இருக்கிறதா? பாதுகாக்கப் பட்ட குடிநீர் வசதி இருக்கிறதா என்று யோசிக்க விடாமல் "சிங்களா டிசைட் டபுளா ஒகே" பண்ண ராஜா சொல்றாரு பாருங்க ...அங்க நிக்குது விளம்பரம்.

அமிர்தா எல்லோருக்கும் வெளிநாட்டில் வேலை கொடுத்ததா?
ராதிகாவை கேட்பீர்களா?

பூஸ்ட் / ஹார்லிக்ஸ் இதுவரை உலகில் யாரையாவது வளர்த்து இருக்கிறது என்று கேட்டிருக்கீர்களா? ஆனால் இந்தியாவில் நடக்குதப்பா! கபில்தேவ், சச்சின், விராட் கோலி இப்படி எல்லோரும் சொல்றாங்களே!இதும் விளம்பரம் தான்....

நவதானியங்கள் அடங்கிய Protein powder  சாப்பிட்டு நம் முன்னோர்கள் 100ஆண்டுகள் வாழ்ந்தது எப்படின்னு நினைத்துப் பாருங்க.

ஒரு எண்ணையில் வடை சுட்டால் உங்களுக்கு ரத்த கொதிப்பு, சக்கரை நோய், சத்து குறைவு நரம்பு தளர்ச்சி நியாபக மறதி இப்படி எல்லா பிரச்சனையும் சரியாகிடுமாம். (உள்மூலம் வெளி மூலம் உள்பட .. :) ) வைட்டமின் A முதல் Z வரை இருக்குதாமே!! விளம்பரம்தான்.
நமது முன்னோர்கள் அரிசி தவிட்டையும், கடைலைப்பருப்பையும் செக்குல ஆட்டி அந்த எண்ணெயை சாப்பிட்டு வந்ததால எந்த கேன்சரும் அவங்கல அன்டல.

கொஞ்சம் கூட சுயசிந்தனை அற்றவர்களா நம்மை இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்க அடிப்பது விளம்பரம்தான் என்று தெரியவில்லையா?

விளம்பரமே செய்யாமல் என்ன பொருள் கிடைக்கும் என நினைக்கிறீர்களா?
   
Vestige பொருட்களுக்கு விளம்பரம் கிடையாது.
பயன்படுத்தியவர்களிடம் கேளுங்கள்.

இத்தனை சொல்றேனே...இதை நீங்கள்  நாலு பேர் அறிய செய்வீர்களா என்ன?
மாட்டீர்கள்.
காரணம் இது விளம்பரம் இல்லை.
நிதர்சனம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here