*_🌴🐯🇮🇳🕊🌴கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னோக்கி இழுக்க வேண்டாம் : கமல் கருத்து_* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*_🌴🐯🇮🇳🕊🌴கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் மூலம் பின்னோக்கி இழுக்க வேண்டாம் : கமல் கருத்து_*

சென்னை : கலாம் இல்லத்தில் தொடக்கி மதுரை மைதானத்தில் முடித்த நாளை மொத்த காலத்திற்கான எரிபொருள் என கருதுவதாக வார நாளிதழில் என்னுள் மய்யம் கொண்ட புயல் கட்டுரையில் கமல் தெரிவித்துள்ளார்.மதுரை பொதுக்கூட்டத்திற்கு வந்தது கூட்டப்பட்ட கூட்டமன்று; அழைக்காமல் வந்த அன்பலை என தெரிவித்துள்ளார்.என் வெற்றியில் பங்குகொண்ட ஒவ்வொரு தமிழனுக்கும் திரும்பி தர வேண்டிய கடமை தனக்கு உள்ளதாக கமல் கூறியுள்ளார்.   

கிராம மேம்பாடே எங்கள் கொள்கை : 

கிராம மேம்பாடே எங்கள் கொள்கை, அங்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே எங்கள் திட்டம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.  மக்கள் நலம், தமிழக நலம் தான் கொள்கை என்றால் அந்த பயணத்தில் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் போடலாம் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். மய்யம் என்றதும் டெல்லியை நினைக்காமல் கிராமத்தை நோக்கி மய்யத்தை நகர்த்த வேண்டும் என கூறியுள்ளார். விவசாய மேம்பாடு, தரமான கல்வி என்ற கொள்கையின் கீழ் பல திட்டங்கள் வைத்திருப்பதாக கமல் கூறியுள்ளார்.

நீட் தேர்வுக்கு ஆதரவு இல்லை : 

நீட் தேர்வுக்கு ஆதரவு இல்லை என்பதே மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு என்றும் பழைய சேர்க்கை முறையில் மருத்துவம் படித்தவர்கள் மூலமே மருத்துவத்தின் தமிழகம் உயரிய தரத்தை அடைந்துள்ளது என்றும் கல்வியில் முன்னோக்கி உள்ள தமிழகத்தை நீட் போன்ற தேர்வுகளால் பின்னுக்கு இழுக்க வேண்டாம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பூரண மதுவிலக்குக்கு ஆதரவு இல்லை :

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மாஃபியா ஒன்று உருவாகும் என்பதால் பூரண மதுவிலக்கிற்கு தான் ஆதரவு இல்லை என கமல் கருத்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மதுவை விரும்பாதவர்களாக ஆக்க முடியாது என்பதே என்னுடை கருத்து என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.குடிப்பதை குறைக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமாக உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் சிறக்கும் :

வளமான தமிழகத்திற்கான விதையை விதைத்துள்ளதாகவும்மக்கள் நீதி மய்யம் அந்த இலக்கை கண்டிப்பாக அடையும் என்றும் தமிழகம் சிறக்கும் எனவும் தெரிவித்தார்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here