கடந்த 2016-17 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றில் திருத்திய விவரங்கள் சமர்ப்பிக்க கெடு இந்த மாதத்துடன் முடிகிறது. வீட்டு வாடகை, குழந்தைகளின் கல்விச்செலவு, ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சில முதலீடுகள் மற்றும் செலவுகளுக்கு வருமான வரி விலக்கு உள்ளது. எனவே, பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை மேற்கண்ட ஆவணங்களை சமர்ப்பித்து ரீபண்டாக பெற்றுக்கொள்ளலாம். இந்நிலையில், அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் பலர் போலி ஆவணங்களை தயாரித்து சமர்ப்பித்து, போலி கணக்குகளை காட்டி ரீபண்ட் வாங்கியுள்ளனர். இதன்படி ரூ.1,000 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறியதாவது: நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் உள்ள அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் இந்த மோசடி நடந்துள்ளது. மும்பையில் மட்டும் திருத்தம் செய்யப்பட்ட 17,000 வருமான கணக்குகள் தாக்கல் செய்து ரீபண்ட் வாங்கியுள்ளனர். பெங்களூருவில் 100க்கும் மேற்பட்ட கணக்குகளில் செலவை அதிகரித்து காட்டி மோசடி செய்யப்பட்டுள்ளன. வீட்டுக்கடன் செலுத்தியதாக இதில் கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகளால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இதுவரை ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்கள் உண்மையாக தாக்கல் செய்த ஆவணங்கள் வருமான வரித்துறையால் ஏற்கெனவே பரிசீலனை செய்யப்பட்டு விட்டன. கூடுதல் ஆவணங்களுடன் திருத்திய ரிட்டர்ன் தாக்கல் செய்துள்ளனர். திருத்திய ரிட்டர்ன்களை பொறுத்தவரை கம்ப்யூட்டர்கள் தானாகவே தகவல்களை அதிகாரிக்கு அனுப்பும் அவர்கள் ரீபண்ட் செயல்படுத்துவார்கள். கடந்த பிப்ரவரி 10ம் தேதி வரை மட்டும் ரூ.1.42 லட்சம் கோடிக்கு ரீபண்ட் வழங்கப்பட்டு விட்டன ரூ.50,000க்கு மேல் ரீபண்ட் கோருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக