🏀🏀அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை* தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், 'அம்மா ஸ்கூட்டர - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

🏀🏀அம்மா' ஸ்கூட்டர்களை விற்க மூன்றாண்டு தடை* தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், 'அம்மா ஸ்கூட்டர

தமிழக அரசால், மானிய விலையில் வழங்கப்படும், 'அம்மா ஸ்கூட்டர்'களை,
மூன்று ஆண்டுகளுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியத்தில், தமிழக அரசால், அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், எந்த நிறுவன வாகனத்தையும், அரசின் மானியத்தில் பெறலாம். அது, இந்தாண்டு தயாரிப்பாகவும், 125 சி.சி., திறனுள்ள, கியர் இல்லாத வாகனமாகவும் இருக்க வேண்டும்.

இந்த ஸ்கூட்டரை மூன்றாண்டுகளுக்கு விற்க முடியாது என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின், கிராமப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் மானிய விலை ஸ்கூட்டர் திட்ட இயக்குனர் அனுமதி இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு, வாகன உரிமையை மாற்ற முடியாது.

இதை, உறுதிப்படுத்தும் வகையில், வாகன உரிமையாளருக்கு வழங்கப்படும்,ஆர்.சி., புத்தகத்தில், 'அம்மாஇருசக்கர வாகன மானிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இந்த வாகனத்தை, மூன்றாண்டுகளுக்கு விற்கவோ, உரிமம் மாற்றமோ செய்யக்கூடாது' என, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here