போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (மே 18) மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நாளை (மே 18) மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.


.

தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித் துறையில் பணிநிரவலை முழுமையாகக் கைவிட வேண்டும், 1997 ஆம் ஆண்டு வரை கடைப்பிடிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதம் 1:20 என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளை வளர்க்கவும் அரசுப்பள்ளிகளை மூடவும் வழிவகுக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் தமிழக அரசின் நிதியைத் தனியார் பள்ளிகளுக்கு வழங்குவதை நிறுத்த வேண்டும், ஒளிவு மறைவற்ற வெளிப்படையான கலந்தாய்வை நடத்திட வேண்டும், பள்ளி கல்வித்துறையில் காலியாக உள்ள 1000 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில்தான் ஜாக்டோ ஜியோ ஆசிரியர் சங்கத்தின் போராட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் ஒரு ஆசிரியர் போராட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here