*தமிழக பள்ளிக்கல்வித் துறையின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 20 வரை நடந்தது. 10.20 லட்சம் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.*
*விடைத்தாள் திருத்தம், மே, 6ல் முடிந்தது.இதையடுத்து, மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள், நேற்று நிறைவடைந்தன.தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி, 23ம் தேதி வெளியிடப்பட உள்ளன.*
*மாணவர்கள் வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக, மதிப்பெண் விபரத்துடன் அனுப்பப்படும். மேலும், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.*
*இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் முதல் தாள் உட்பட, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. இதனால், தேர்ச்சி சதவீதம், மதிப்பெண்கள் கடும் சரிவை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.*
*ஆனாலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் தேர்ச்சியில் பிரச்னை இருக்காது எனவும், மதிப்பெண்ணில் மட்டுமே மாற்றம் இருக்கும் எனவும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.*
*10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட வாரியாக, முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரங்கள் இடம் பெறாது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக