இலங்கை முழுவதும் 8000 காலிப் பணியிடங்ள் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கையின் கல்வி அமைச்சர் சண்டிமா ராசபுத்ரா கூறுகையில்,
"நாட்டில் ஆரம்பநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது, தெற்கு மாகாணத்தில் 70 சதவிகிதத்தினர் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறார்கள் மேலும் 400 ஆரம்பப் பள்ளிகளில் நடன ஆசிரியர்கள் நியமனம் செய்ய இருக்கிறோம், கணிதம், விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் வணிகம் ஆகியவற்றிற்கான ஆசிரியர்களை நியமிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆசிரியர்களுக்கான நுழைவுத் தேர்வு ஒன்றையும் ஏற்பாடு செய்ய உள்ளோம். குறிப்பாக ஆங்கில மொழி ஆசிரியர்களுக்காகத் தகுதி தேர்வை நடத்த வேண்டுமென நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகையில், ”நாடு முழுவதும் உள்ள ஆரம்ப பாடசாலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக