முதுநிலை மருத்துவ படிப்புக்கான அனைத்திந்திய தரவரிசையில் இடம்பெற்ற 22 பேர், தமிழக அரசின் ஒதுக்கீட்டு இடத்திற்கான கலந்தாய்விலும் பங்கேற்க வந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் இணைய செய்திகள்
தமிழகத்தில் எம்எஸ், எம்டி, எம்டிஎஸ் ஆகிய முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் 10,111 பேருக்குத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் எம்டி, எம்எஸ் படிப்புகளுக்கு 15 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலும் சேர்த்து 1,103இடங்கள் உள்ளன. எம்டிஎஸ் படிப்புக்கு 213இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளில் மாற்றுத் திறனாளிகளுக்குக் கலந்தாய்வு நடைபெற்றது.
முதுநிலை மருத்துவ மேற்படிப்பு பயில இருக்கும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று (மே 18) தொடங்கியது. இந்தக் கலந்தாய்விற்கு 1,400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் அகில இந்திய பிரிவில் மருத்துவ சேர்க்கை அனுமதி பெற்ற 22 பேர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கலந்தாய்விற்கு அனுமதி கோரினர். இதற்கு, கலந்தாய்விற்கு வந்த மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடைபெற்ற கலந்தாய்வில் குழப்பம் ஏற்பட்டது. இதன்பின்னர் 22 மாணவர்களையும் கலந்தாய்வு அறைக்குள் அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
வேறு மாநிலத்திலோ, அனைத்திந்திய ஒதுக்கீட்டிலோ இடம்பெற்றவர்கள் இருமுறை கலந்தாய்வில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகக் கலந்தாய்வின்போது அசல் சான்றுகளைக் கொண்டுவர வேண்டும் என மருத்துவத் தேர்வுக் குழு அறிவுறுத்தியிருந்தது.தமிழ் இணைய செய்திகள்
அனைத்திந்தியத் தரவரிசையில் இடம்பெற்ற 22பேரும் உண்மைச் சான்றுகளைக் கொண்டுவராததையடுத்து அவர்களுக்கு இன்றைய கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து, கலந்தாய்வைத் தடை செய்யுமாறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக " ஏற்கனவே முதுநிலை மருத்துவ மேற்படிப்புக்கான இடத்தைத் தேர்வு செய்து விட்டு, அசல் சான்றிதழ்களையும் ஒப்படைத்து விட்டு 22 மாணவர்களும், கலந்தாய்விற்கு வந்துள்ளனர். இதனால் பின்னால் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும்" என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக