ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் புதிய விதிமுறைகள்? - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் புதிய விதிமுறைகள்?


ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் புதிய விதிமுறைகளை புகுத்தும் முடிவை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிவில் சர்வீஸஸ் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இளைஞர்களை ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட 24 அகில இந்திய பணிகளுக்கு நியமிக்கும் முறையையும், அதன் அடிப்படையில் அவர்கள் பணியாற்றும் மாநில ஒதுக்கீடுகளையும் ரத்து செய்துவிட்டு, மூன்று மாதங்கள் பவுண்டேஷன் கோர்ஸில் இருக்கும்போது எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் எந்தப் பணிக்கு ஒருவரை தேர்வு செய்வது என்பதையும், எந்த மாநிலத்தில் பணியாற்ற அவருக்கு ஒதுக்கீடு வழங்குவது என்பதையும் முடிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்குக் கண்டனம் தெரிவித்து இன்று (மே 20) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ''ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்தியப் பணிகளுக்கான (தமிழ் இணைய செய்திகள்) தேர்வுகளிலும் சமூக நீதியை சீர்குலைக்கும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க மத்திய பாஜக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

"ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று நாட்டின் நிர்வாகத்தில் தங்களது பங்களிப்பைச் செலுத்தி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசும், பிரதமர் அலுவலகமும் இப்படியொரு அநீதியான பவுண்டேஷன் கோர்ஸ் தேர்வு முறையைப் புகுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், "இரவு பகலாக படித்து, தேர்வு பெற்று, பல தடைகளை தாண்டி நேர்முகத் தேர்விலும் வெற்றிபெற்ற இளைஞர்களின் தலைவிதியை முசோரியில் உள்ள ஒரு டஜன் பேராசிரியர்களிடம் ஒப்படைத்து, சமூக நீதிக் கொள்கைகளுக்கு மன்னிக்க முடியாத அநீதியைச் செய்ய பாஜக அரசும், பிரதமர் அலுவலகமும் துணிந்து விட்டது" என்றும் விமர்சித்துள்ளார்.தமிழ் இணைய செய்திகள் 

மேலும், "பவுண்டேஷன் கோர்ஸ் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களின் ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுகளைத் தகர்க்கும் பிரதமர் அலுவலகத்தின் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இத்தனை ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் சிவில் சர்வீஸஸ் தேர்வு அடிப்படையிலேயே அகில இந்திய பணிகளுக்கு தேர்வு செய்ய வேண்டும். தவறினால் சமூக நீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பாஜக அரசை எதிர்த்து இளைஞர்களைப் பெருமளவில் திரட்டி மாபெரும் போராட்டத்தை திமுக நடத்திடும்''என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here