ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைய எளிய வழி நீங்கள் விரும்பும்படியான உடையை உங்களால் அணிய முடியவில்லையா? உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? என்ன செய்தாலும், உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லையா? உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது. ஒருவர் உடல் எடையைக் குறைக்க முயலு - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ஒரே மாதத்தில் பத்து கிலோ எடை குறைய எளிய வழி நீங்கள் விரும்பும்படியான உடையை உங்களால் அணிய முடியவில்லையா? உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட்டைப் பின்பற்றுகிறீர்களா? என்ன செய்தாலும், உங்களால் எடையைக் குறைக்க முடியவில்லையா? உங்கள் கஷ்டம் எங்களுக்கு புரிகிறது. ஒருவர் உடல் எடையைக் குறைக்க முயலு


ஒருவர் உடல் எடையைக் குறைக்க முயலும் போது, முதலில் பொறுமை என்பது அவசியம். உடல் எடையை எவராலும் எடுத்த எடுப்பிலேயே குறைத்து விட முடியாது. மேலும் மெதுவாக உடல் எடையைக் குறைக்க முயற்சித்தால் தான், உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

அதற்கு சரியான டயட்டுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கவழக்கங்களையும் அன்றாடம் பின்பற்றி வர வேண்டும். இந்த பழக்கவழக்கங்கள் நிச்சயம் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். சரி, இப்போது அவை என்னவென்று பார்ப்போம்.

குளிர்ந்த நீரில் குளி

www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

ஆம், குளிர்ந்த நீரில் குளியல் மேற்கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும். குளிர், மழைக்காலத்தில் இது சற்று அசௌகரியமாக இருக்கலாம். ஆனால் குளிர்ந்த நீரில் குளிப்பதல், உடலின் வெப்பநிலை குறையும் மற்றும் உடலை வெதுவெதுப்பான நிலையில் வைத்துக் கொள்ள உடலானது கொழுப்புச் செல்களை கரைக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் உடல் எடை குறையும்.

க்ரீன் டீ

பல ஆய்வுகளிலும் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களிலேயே சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒருவர் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், நிச்சயம் ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். இதற்கு க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிப்பது தான்.

http://pk41news.blogspot.com

நார்ச்சத்துள்ள காலை உணவு

உடல் எடையைக் குறைக்க டயட் மேற்கொள்கிறேன் என்று காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. இதனால் உடல் பருமன் மேன்மேலும் தான் அதிகரிக்கும். எனவே காலையில் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் 9 மணிக்குள் உட்கொள்ளும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

தினசரி மாலையை விட, அதிகாலையில் உடற்பயிற்சி செய்து வந்தால் உடல் எடை குறைவதோடு, உடல் ஆரோக்கியமும் இன்னும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி, ஒருவர் காலையில் உடற்பயிற்சி செய்தால், நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

புரோட்டீன் உணவுகள்

காலை உணவின் போது புரோட்டீன் உணவுகளான முட்டை, பீன்ஸ், முளைக்கட்டிய பயிர்கள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். புரோட்டீன் கொழுப்புச் செல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் தசைகளின் அடர்த்தியை மேம்படுத்தும்.

எலுமிச்சை ஜூஸ்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, கொழுப்புக்கள் சற்று வேகமாக கரைக்கப்படும்.

அதிகாலை சூரியனிடம் விளையாடுங்கள்

http://www.sivakasiteacherkaruppasamy.blogspot.com

ஆய்வு ஒன்றில் அதிகாலை சூரியகதிர்கள் சில கிலோ எடையைக் குறைக்க உதவுவதாக கூறுகிறது. அதுவும் சூரியக்கதிர்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here