ஜூன் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியப் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். இந்த மாநாட்டுக்குச் சென்றுள்ள மோடியிடம் இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்த தனது விருப்பத்தை ஷி ஜின்பிங்க் வெளிப்படுத்தியுள்ளார்.
"2020ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலர்களாக உயர்த்த புதிய ஒப்பந்தம் இட வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையைத் தீர்க்க பாசுமதி அரிசி மற்றும் சர்க்கரை இறக்குமதியைச் சீனா அதிகரிக்கும்" என்று ஷி பின்ஜிங்க் மோடியிடம் கூறியதாக வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தற்போது இந்தியா - சீனாவுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 84.44 பில்லியன் டாலராக உள்ளது. முன்னதாக 2015ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததது. ஆனால், அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட இயலாததால் தற்போது மீண்டும் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை எட்ட ஒப்பந்தம் இடுவதற்கான முயற்சிகளைச் சீனா தொடங்கியுள்ளது. மேலும், சீனப் பொதுத் துறை வங்கிக் கிளையை இந்தியாவில் தொடங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் கோகலே கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியாவும், பாகிஸ்தானும் கலந்துகொள்வது இதுவே முதன்முறை. இந்த ஆண்டு 18 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளன. கடந்த ஒரு மாதத்தில் மோடி சீனா செல்வது இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக