ட்ரம்ப் - கிம் :முக்கிய பேச்சுவார்த்தை! 65 ஆண்டுகளாக பகை முகாம்களாக இருந்து வந்த அமெரிக்கா வடகொரியா நாடுகளின் அதிபர்கள்  - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ட்ரம்ப் - கிம் :முக்கிய பேச்சுவார்த்தை! 65 ஆண்டுகளாக பகை முகாம்களாக இருந்து வந்த அமெரிக்கா வடகொரியா நாடுகளின் அதிபர்கள் 


65 ஆண்டுகளாக பகை முகாம்களாக இருந்து வந்த அமெரிக்கா வடகொரியா நாடுகளின் அதிபர்கள் செவ்வாயன்று சிங்கப்பூரில் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனா் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பில் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை நிறுத்துவது மற்றும் கொரிய தீபகற்பத்தை அமைதி மண்டலமாக மாற்றுவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

1950-53களில் நடந்த கொரிய போருக்கு பின்னர், அமெரிக்கா மற்றும் வடகொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே எந்த பேச்சுவார்த்தையும் இருந்ததில்லை.இரு நாடுகளின் அதிபர்களும் தொலைபேசியில் கூட பேசியது கிடையாது.

கடந்த பல ஆண்டுகளாகவே வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணைகளை பரிசோதித்து வந்தது. இதில் சில அணு ஆயுத ஏவுகணைகள் தொலை துார தாக்குதலில் சிறந்தவையாக தயாரிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அமெரிக்காவை குறி வைத்து தாக்குதல் தொடுப்பதற்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த பரிசோதனைகளை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன. இதில் அமெரிக்கா வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. அணு ஆயுத பரிசோதனைகளை நிறுத்தாவிட்டால் மேலும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் அமெரிக்க தரப்பிலிருந்து விடப்பட்டது. தேவைப்பட்டால் வடகொரியா மீது ராணுவத்தாக்குதல் தொடுக்கத் தயங்க மாட்டோம் என்று அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்து வந்தன.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் அமெரிக்காவுடனும் தென் கொரியாவுடனும் பேச்சு வார்த்தை நடத்த தயார் என்று திடீரென்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக, இன்று இரவு 9 மணியளவில் கிம்மும் ட்ரம்பும் சிங்கப்பூரிலுள்ள பிரிட்டிஷ் ஆர்ட்டிரிலரி மெஸ் என்ற பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் வரும் செவ்வாயன்று இந்த சந்திப்பும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டுள்ளது.

இதற்காக சிங்கப்பூர் வந்த வடகொரிய அதிபர் கிம்மை சிங்கப்பூரின் வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்நாட்டின் உயர் அதிகாரிகளுடன் சிங்கப்பூருக்கு தனி விமானத்தில் வருகை தந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here