*🔴🔴தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

*🔴🔴தனியார் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடங்கள்: கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம்*

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்களைத் தேர்ந்தெடுத்து பின்னர் அதை கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 11-ஆம் தேதி தொடங்கியுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று அதனைக் கைவிடுவோர் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., தகவல்குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ள விதிகளில் இந்த விதியும் இணைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிக்குள் இடங்களைக் கைவிட்டால் ஒப்பந்தத்தைத் மீறியதற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு இடங்களைக் கைவிட்டால் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here