*💎மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது. அத்துடன், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது*
*💎தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது*
*💎அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய கற்பித்தல் பணிகளின்றி சம்பளம் பெறுகின்றனர்*
*💎இதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய, பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக, இணைக்கப்பட வேண்டிய பள்ளிகள், ஆசிரியர்களின் விபரங்களை திரட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன*
*💎இதுகுறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாவட்ட செயலாளர் முருகவேள் கூறியதாவது: தமிழகத்தில், 37 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன*
*💎20 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகள் உள்ளதாக, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். தற்போது, 10 மாணவர்களுக்கு குறைவாகவுள்ள பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது*
*💎செப்டம்பருக்குள், 1,200 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை, அருகிலுள்ள பள்ளிகளோடு இணைக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இங்கு பணிபுரியும் உபரி ஆசிரியர்களை, பணிநிரவல் செய்யவுள்ளனர்*
*💎இதில், சேலத்தில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகள் இணைக்கப்படவுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், ரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில், 2,800 ஆசிரியர்கள் காலிப்பணியிடம் உள்ளது*
*💎இதனால், அந்த எட்டு மாவட்டங்களில், கடந்த, 21ல் நடந்த தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர் கலந்தாய்வில், மற்ற மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவுக்கு, தடை விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக