ஒரு மாணவனை ஆசியரியர் கண்டிப்பதற்காக கன்னத்தில் அறைவது அவரை தற்கொலைக்குத் தூண்டுவது ஆகாது என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது
இது தொடர்பான வழக்கு ஒன்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு மனுவில் கூறியுள்ளதாவது
அனுப்பூர் மாவட்டத்திலுள்ள கோத்மா நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்த 10 வகுப்பு மாணவி ஒருவர் பள்ளியின் முதல்வர் திட்டியதாலும் கன்னத்தில் அறைந்ததாலும் மனம் உடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அந்த பள்ளியின் வகுப்பு நேரத்தில் வகுப்பிற்கு போகாமல், வெளியே சில சக மாணவிகளுடன் சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்ததை பார்த்த முதல்வர் அவரைக் கண்டித்ததாகவும் இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர், இந்திய தண்டனைச்சட்டத்தின் பிரி’வு 306ன் கீழ் தற்கொலைக்கு தூண்டினார் என முதல்வருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முயற்சி்த்தனா். ஆனால் போலீசார் மறுத்து விட்டனர்.
பின்னர், அவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், முதல்வர் சக மாணவிகளின் முன்பாக திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் எனவே அவர்தான் தற்கொலைக்கு தூண்டியுள்ளார். எனவே முதல்வர் மீது தற்கொலைக்கு தூண்டியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்
பின்னர் இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஸ்ரீதரன் கூறியதாவது
பள்ளி ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ முதல்வரோ மாணவ மாணவியை கண்டிப்பது சில சமயங்களில் கடுமையான ஒழுங்கு மீறல்கள் இருந்தால் கன்னத்தில் அறைவது போன்ற குறைந்த பட்ச தண்டனை வழங்குவது தற்கொலைக்கு தூண்டுவது ஆகாது. தண்டனை அளிக்கப்படும் போதே அல்லது திட்டும் போதோ மாணவர் சில சமயம் மனஉளைச்சலுக்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. இங்கு ஆசிரியர் பெற்றோர் நிலையில் இருக்கிறார். அதனால் மாணவனை கண்டிப்பதும் தண்டிப்பதும் தவறல்ல. அப்போதே மாணவர் சமூகத்தை எதிர்கொள்ள தயாராக முடியும்.
இவ்வாறு நீிதிபதி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக