மாணவர்களிடம் அதிக வரவேற்பு : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்கள் அதிகரிப்பு* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மாணவர்களிடம் அதிக வரவேற்பு : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% இடங்கள் அதிகரிப்பு*

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவீத இடங்களை அதிகரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் ஆர்வம் குறைந்து மக்கள் அறிவியல், கலை பாடத்தை விரும்புகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள, சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களிலிருந்தும், நகராட்சியிலிருந்தும் மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளில் அதிக அளவில் கல்வி பயில விண்ணப்பித்துள்ளனர்

. இந்த மாணவ, மாணவிகள் அதிக கல்விக்கட்டணம் செலுத்தி தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் கல்வி பயில மிகவும் சிரமப்படுகின்றனர்.

அரசு கல்லூரிகளில் 2018-19ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது

.எனவே, மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டிற்கு கலை பாட பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கலாம்.

மாணவர்கள் நலன் கருதி, 2018-19ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டார்.இயக்குனரின் கருத்துருவை அரசு பரிசீலித்தது.

அதன்படி 2018-19ம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இக்கல்வியாண்டிற்கு கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஆய்வக வசதிக்கு ஏற்ப 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ, மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.

இக்கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here