கிருஷ்ணகிரி மாவட்டம் பஞ்சாப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நான்கு ஆண்டுகளுக்குக் குத்தகைக்குக் கொடுத்திருந்த நிலையில், குழந்தை பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (ஜூன் 20) அந்தச் சிறுவனை மீட்டுள்ளனர்.
பஞ்சாப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி காவேரி. இவர் தனது மூன்றாவது மகனான ஆறு வயது சிறுவனை, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளப்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய்க்கு நான்கு ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு கொடுத்துள்ளார்.
குத்தகைக்கு வாங்கிய அந்தச் சிறுவனை, வடிவேல் ஆடு மேய்க்கப் பயன்படுத்தி உள்ளார். இந்தத் தகவலை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குழந்தை பாதுகாப்பு அதிகாரி பிரியாவுக்குத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர், ஆடு மேய்த்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவனை மீட்டு விசாரணை மேற்கொண்டார். பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில் 15 ஆயிரம் ரூபாய்க்குத் தந்தையே குத்தகைக்குவிட்டிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் அந்தச் சிறுவனை மீட்ட அதிகாரிகள், தர்மபுரியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர். சிறுவனைக் குத்தகைக்குக் கொடுத்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக