சட்ட விரோதமாக வந்ததாகக் கூறி 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவும், அவர்களது குழந்தைகளைத் தனியாகப் பிரித்து வைக்கவும் அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியில் இருந்து மே மாதம் 31ஆம் தேதிவரை மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி 2,000த்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஒரேகான் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுபோன்று தெற்காசியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேற சென்ற 123 பேர் ஷெரிடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் 50 பேர் இந்தியர்கள் என்றும் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் பஞ்சாபி மொழி பேசுவதாகவும், சிலர் மட்டும் சீனர்கள் என ஒரேகான் ஆசிய பசிபிக் அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஓர் அறைக்கு மூன்று பேர் வீதம் 20 முதல் 23 மணி நேரம் சிறையில் அடைத்து வைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் வழக்கறிஞர்களையும், தங்களுடைய மனைவி மற்றும் குழந்தைகளையும் பார்க்க முடியாத சூழ்நிலை இருப்பதால் அவர்களைப் பிரிந்துவிடுவோம் என்று சிறையில் உள்ளவர்கள் அஞ்சுவதாக அந்தச் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ட்ரம்ப்பின் இந்த முடிவு உலக நாடுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம், காவலில் வைக்கப்பட்டவர்களைத் தொடர்புகொண்டு, நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்ப்பின் இந்தப் புதிய குடியேற்றக் கொள்கைக்கு உலக நாடுகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் ட்ரம்ப் மனைவி மெலனியா உட்பட பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அகதிகளிடம் இருந்து குழந்தைகளைப் பிரிக்கும் செய்தி அமெரிக்காவின் எம்எஸ்என்பிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்தச் செய்தியை அரசியல் செய்தியாளர் ராச்செல் மேடோ வாசித்தார்.
சட்ட விரோதமாகக் குடியேறும் மக்கள் சிறைகளிலும், அவர்களின் குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு காப்பகங்களுக்கும் அனுப்பப்படுகிறார்கள். இந்தக் காட்சியைப் பார்க்கும்போதும், குழந்தைகள் கண்ணீர் விட்டு அழும்போதும் வேதனையாக இருக்கிறது என்று கூறிக்கொண்டே ராச்செல் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். ஒருகட்டத்தில் செய்தி வாசிக்க முடியாமல் எழுந்து சென்றார்
இதையடுத்து, செய்தி வாசிக்கும்போது கட்டுப்படுத்தமுடியாத அழுகையால் பாதியில் எழுந்து சென்றதற்கு ராச்செல் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக