மத்திய அரசுப் பணி, வங்கிப் பணி ஆகியவற்றுக்கு தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோருக்கு சென்னை மற்றும் கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படவுள்ளன.
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம் மற்றும் எம்பவர் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில், வங்கிப் பணிகளுக்கான தேர்வு மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் தேர்வு ஆகியவற்றில் பங்கேற்கும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சென்னை மற்றும் கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
வங்கி தேர்வுக்காக திறம்பட பயிற்சி வகுப்புகள் நடத்தும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் தொடக்க நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு வரை தொடர்ச்சியாக தினமும் 2 மணி நேரம் பயிற்சி வகுப்புகள் சென்னை மற்றும் கோவையில் நடைபெறும்.
தேர்வுக்கான பாடங்கள், மாதிரி தேர்வு முறைகள் அனைத்தும் இணையம் வழியாக வழங்கப்படும்.
பயிற்சி வகுப்பு முற்றிலும் எந்தவித கட்டணமும் இன்றி இலவசமாக அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் 50 பேருக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அதிகமாக இருப்பின், தேர்வு நடத்தி 50 பேர் தேர்வு செய்யப்படுவர்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் வங்கி பதவி தேர்வு அல்லது பணியாளர் தேர்வு ஆணையத் தேர்வுக்கு அனுப்பிய விண்ணப்பத்தின் நகலை empower.socialjustice@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு ஜூன் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும்.
மேலும், விவரங்களுக்கு 93810 07998, 91760 75253 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்தகவலை யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் நல சங்கத்தின் தமிழகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக