ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொங்கர்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
பாட புத்தகங்கள் விலை அதிகமாக இருப்பதாகவும், பற்றாக்குறை உள்ளதாகவும் புகார் வருகிறது.
தற்போது பாட புத்தகங்கள் தரமான தாளில் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளதால் விலை அதிகமாக உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டது. எனவே தட்டுப்பாடு கிடையாது.
தற்போதைய பாடத்திட்டங்களில், நீட் தேர்வுக்கு 40%தேவையான கேள்வி-விடைகள் உள்ளது. அதனால் பெற்றோர்கள் புதிய பாடத்திட்டத்தை வரவேற்று உள்ளனர்.
மேலும் பாடநூல் நிறுவனம் மூலம் தேவையான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பத்து கவுன்ட்டர்கள் மூலம் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
32 மாவட்டங்களில் நடமாடும் நூலகம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக