பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஊர்வனங்கள் குறித்த பயிற்சி வகுப்புகள் இன்று முதல் நடத்தப்படுகிறது. கிண்டி சிறுவர் பூங்கா அருகில் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது.
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாம்புகள் மற்றும் ஊர்வனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.
தற்போது மாணவர்கள் பயிலும் பள்ளி , கல்லூரி மூலம் அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ள பாம்பு, ஆமை மற்றும் ஊர்வனங்கள் பற்றி வகுப்புகள் எடுக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் 6 முதல் 12ம் வகுப்பு, கல்லூரி மாணவர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
இது குறித்து சுற்றுச் சூழல் அலுவலர் கூறுகையில்: இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் வீதம் 2 முதல் 3 மணி நேரம் வகுப்புகள் நடத்தப்படும்.
6 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.10ம், 8 முதல் 12 வகுப்பு மற்றும் கல்லூரி வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.20ம் கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் பள்ளி, கல்லூரி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவுக்கு 9443568445 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
роХро░ுрод்родுроХро│் роЗро▓்ро▓ை:
роХро░ுрод்родுро░ைропிроЯுроХ