மந்தமான வளர்ச்சியில் தனிநபர் வருவாய்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

மந்தமான வளர்ச்சியில் தனிநபர் வருவாய்!

கடந்த ஆறு ஆண்டுகளிலேயே 2017-18 நிதியாண்டில்தான் இந்தியாவின் தனிநபர் வருவாய் மிக மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகப் புளூம்பெர்க் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் தனிநபர் வருவாய் 2017 மார்ச் மாத நிலவரப்படி ரூ.1,03,870 ஆக இருந்தது. அது 2018 மார்ச் மாதத்தில் ரூ.1,12,835 ஆக மட்டுமே உயர்ந்துள்ளதாகப் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது 8.6 சதவிகித வளர்ச்சி என்றாலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இது மிக மந்தமான வளர்ச்சியாகும். முன்பு பணவீக்க விகிதம் அதிகமாக இருந்ததின் விளைவாகவே தனிநபர் வருவாய் வளர்ச்சி அதிகமாக இருந்ததாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான அர்ஜூன் ஜெயதேவ் கூறுகிறார். அதாவது 2012-13ஆம் ஆண்டில் நுகர்வோர் விலைப் பணவீக்கம் 10.2 சதவிகிதமாகவும், 2013-14ஆம் ஆண்டில் 9.5 சதவிகிதமாகவும் இருந்தது.

இதுகுறித்து புளூம்பெர்க் ஊடகத்திடம் அர்ஜூன் ஜெயதேவ் பேசுகையில், “இந்த ஆண்டுக்கான இந்தியாவின் தனிநபர் வருவாயானது முந்தைய நான்கு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகும். வங்கித் துறையில் ஏற்பட்ட பின்னடைவால் முதலீடுகள் குறைந்தது, பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கம் போன்ற காரணங்களால் இந்தியாவின் தனிநபர் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது” என்றார்.

உலக வங்கி வெளியிட்டிருந்த அறிக்கையிலும் இந்தியாவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதங்கள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருவதாகக் கூறியிருந்தது. 2016ஆம் ஆண்டில் வெளியான இந்த அறிக்கையில் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டுமானால் தனிநபர் வருவாய் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

தனிநபர் வருவாய் அடிப்படையில் உலகின் 200 நாடுகளில் இந்தியா மிக மோசமாக 126ஆவது இடத்தில் இருப்பதாகச் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த 2017ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here