இந்தியாவுக்குக் குவியும் வர்த்தக வாய்ப்புகள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்தியாவுக்குக் குவியும் வர்த்தக வாய்ப்புகள்!

அமெரிக்காவின் 50 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகளுக்கு வரி விதித்த சீனா, தற்போது இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த பயிர் ஆண்டில், இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அனுப்பப்படும் பருத்தியின் அளவு ஐந்து மடங்கு அதிகரித்து 5 மில்லியன் பேல்களாக (850,000 டன்) உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், சீனாவிலிருந்து இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. ஏற்கெனவே சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் சூடுபிடித்துள்ளது. இதனிடையே இந்தியாவின் பருத்தியை சீனா அதிகளவில் கொள்முதல் செய்யலாம் என்று ஏற்றுமதியாளர்கள் கருதுகின்றனர். பருத்தி ஏற்றுமதியில் உலகளவில் முதலிடத்தில் உள்ள அமெரிக்கா, சீனாவின் இறக்குமதிகளுக்குக் கடந்த பத்தாண்டுகளாக நெருக்கடியை ஏற்படுத்தி வந்தது. ஜூலை 6 முதல் பருத்தி உட்பட அமெரிக்கப் பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியைச் சீன அரசு விதித்துள்ளது. இதனால் சீனாவின் சந்தை வாய்ப்புகளை இந்தியாவால் கைப்பற்ற முடியும்.

இதுகுறித்து பருத்தி ஏற்றுமதி நிறுவனமான டி.டி.காட்டன் நிறுவனத்தின் நிர்வாக மேலாளரான அருண் செக்சரியா ‘பிசினஸ் லைன்’ ஊடகத்திடம் பேசுகையில், “புதிய பருவத்திற்கான பருத்தி குறித்து சீனாவிலிருந்து எங்களுக்குக் கடந்த சில வாரங்களாக விசாரணை அழைப்புகள் வந்துள்ளன. சீனா விதித்துள்ள 25 விழுக்காடு வரி அமல்படுத்தப்பட்டால், இந்தியாவால் சீனாவுக்கு 5 மில்லியன் பேல்கள் (850,000 டன்) அளவிலான பருத்தியை ஏற்றுமதி செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார். புதிய பருவத்துக்கான அறுவடையிலிருந்து சீனாவுக்கு 5,00,000 பேல்கள் (85,000 டன்) பருத்தியை ஏற்றுமதி செய்ய இந்தியா ஏற்கெனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here