இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு நீதிமன்றம் உத்தரவு!

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறரை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்த மனுவுக்கு ஜூன் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்க, இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில், எம்பிபிஎஸ் படிப்பில், புதுச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டதாகவும், அதில் ஆறு பேர் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதால் இந்த மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரியும், சரண்தேவ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இநு்த மனுவை நேற்று (ஜூன் 21) விசாரித்த நீதிபதி கல்யாண சுந்தரம், மனுவுக்கு வரும் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கும் உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here