அமெரிக்காவுடன் வர்த்தகச் சிக்கலுக்குத் தீர்வு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

அமெரிக்காவுடன் வர்த்தகச் சிக்கலுக்குத் தீர்வு!

அமெரிக்காவுடனான வர்த்தகச் சிக்கல்களுக்கு உரியத் தீர்வு எட்டப்படும் என்று ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளிநாட்டுப் பொருட்களுக்கு அண்மைக் காலமாக இறக்குமதி வரி விதிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஒரு வர்த்தகப் போரே மூண்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில உருக்குப் பொருட்களுக்கும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டதால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உலக வர்த்தக கவுன்சிலிடம் இந்தியா புகார் அளித்துள்ளது.

இந்த நிலையில் ஒன்றிய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அமெரிக்கா சென்று அந்நாட்டு வர்த்தகத் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்நாட்டு அதிகாரிகளோ உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வரி விதிக்கப்பட்டுள்ளது என விவாதம் செய்துள்ளனர். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பேச்சுவார்த்தையில் பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. ஆனால், பிரச்சினைக்குத் தீர்வுகாண முயன்றோம். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்துக்குச் சில சலுகைகளை அமெரிக்கா கோருகிறது. எல்லா நாடுகளும் அவர்கள் நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்குத்தான் சிறந்த ஒப்பந்தங்களை எதிர்பார்க்கும்" என்றார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் ஹெச்1பி விசாக்களுக்குக் கட்டுப்பாடு விதித்தது. இதய அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் ஸ்டென்ட் கருவிகளின் விலையை இந்தியா குறைத்தது. இதற்கு அமெரிக்க ஸ்டென்ட் தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இப்போது உருக்குப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தில் தீராத பதற்ற நிலை தொடர்ந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here