காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குழந்தை என குறிப்பிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸை எதிர்க்கட்சியாகப் பெற்றிருப்பது தங்களின் அதிர்ஷ்டம் - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குழந்தை என குறிப்பிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸை எதிர்க்கட்சியாகப் பெற்றிருப்பது தங்களின் அதிர்ஷ்டம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குழந்தை என குறிப்பிட்ட பாஜக தலைவர் அமித் ஷா, காங்கிரஸை எதிர்க்கட்சியாகப் பெற்றிருப்பது தங்களின் அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்தார்.

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் நேற்று (ஜூன் 8) நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை குழந்தை என்று குறிப்பிட்ட அமித் ஷா, “இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சியில் உள்ளது. பல மாநிலங்களில் அதிகாரத்தை இழந்துவிட்டு, சில இடைத்தேர்தல்களில் பெற்ற வெற்றிகளுக்குத் திருப்தி கொள்ளும் எதிர்க்கட்சியைப் பெற்றிருப்பது எங்களுக்குக் கிடைத்த பெரும் அதிர்ஷ்டமாய் பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அது நடைபெறவில்லை இது நடைபெறவில்லை எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். 70 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள் என்ன செய்தீர்கள் என்று என்னிடம் கூறுங்கள் சகோதரரே. உங்களின் மூன்று தலைமுறையினர் தான் கடந்த 70 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்துள்ளனர். கழிப்பறைகள் கட்டுவது, ஏழைத் தாய்மார்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்குவது போன்ற பணிகளை நீங்கள் செய்து இருந்தீர்கள் என்றால், இந்த பணிகளை செய்ய வேண்டிய அதிர்ஷ்டம் எங்களுக்குக் கிடைத்து இருக்காது” என்றும் கூறினார்.

உலகின் பிரபலமான தலைவரான நரேந்திர மோடி இந்தியாவை வழி நடத்துவது தங்களின் அதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்தார்.

ராகுல் காந்தி விடுமுறைக்கு எங்கு செல்கிறார் என்பதும், எங்கிருந்து வருகிறார் என்பதும் யாருக்கும் தெரியாது எனக் குற்றம் சாட்டிய அமித் ஷா, வரவுள்ள ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் தொண்டர்களிடம் வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here