அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பார்கிங் இடம் இருந்தால் மட்டுமே புது கார்கள் வாங்க முடியும் என்ற புதிய சட்டத்தை பெங்களூரு அரசு அமல்படுத்தியுள்ளது.
மக்கள் சொந்த வாகனப் பயன்பாட்டைத் தவிர்த்து பொதுப் போக்குவரத்தை ஊக்கப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடகாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் டிசி தம்மன்னா தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கர்நாடக அரசு வாகனப் பதிவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தப் புதிய வாகன சட்டம் குறித்துப் பேசிய டிசி தம்மன்னா, "பெருகிவரும் வாகனங்களால் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் ஒரே வீட்டில் உள்ள குடும்பத்தினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பல வாகனங்களைப் பயன்படுத்தி வருவதே. இதில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன. மக்கள் பொது போக்குவரத்துக்கு மாறுவதைக் கருத்தில்கொண்டு பார்கிங் இடம் இருந்தால் மட்டுமே புது வாகனங்களைப் பதிவுசெய்ய முடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடமிருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெங்களூரில் எலெக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யவிருப்பது பற்றிப் பேசிய அவர், "தற்போது பெங்களூரில் புதிதாக 80 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்க மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளது. இருப்பினும் மேலும் 70 புதிய பேருந்துகளை இயக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக