இருவருக்கு ஓர் அறை: ஊழியர்கள் எதிர்ப்பு! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

இருவருக்கு ஓர் அறை: ஊழியர்கள் எதிர்ப்பு!

ஏர் இந்தியாவின் ஹோட்டல் அறை பகிர்வு கொள்கைக்கு கேபின் குழு தொழிற்சங்கத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிகுந்த கடன் சுமையில் சிக்கியுள்ள பொதுத் துறை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா அண்மையில், செலவைக் கட்டுப்படுத்தும் விதமாக ஹோட்டல் அறைகளைப் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்துக்கு கேபின் குழு தொழிற்சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆண் - பெண் என இருபாலரும் பணிபுரிவதால் ஆண் ஊழியர்களுடன் அறையைப் பகிர்ந்துகொள்ள இயலாது பெண் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினை குறித்து ஏர் இந்தியா கேபின் குழு தொழிற்சங்கம், ஏர் இந்தியா ஊழியர்கள் சங்க அதிகாரிகளுடனும், ஏர் ஊழியர்கள் தொழிற்சங்க கார்ப்பரேஷனுடனும் ஜூன் 14ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா கேபின் குழு தொழிற்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஏர் இந்தியாவின் இந்தக் கடுமையான முடிவு கவலை அளிப்பதாக உள்ளது. எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என்று கூறியுள்ளது.

ஏர் இந்தியா நிர்வாகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் 2017ஆம் ஆண்டில் பணியமர்த்தப்பட்ட கேபின் குழு ஊழியர்களுக்கு 3 அல்லது 4 நட்சத்திர விடுதிகளில் இருவருக்கு ஓர் அறை என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. இதற்குத்தான் இப்போது கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here