ராகிங்கை தடுக்க மூன்று குழுக்கள்! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

ராகிங்கை தடுக்க மூன்று குழுக்கள்!


பெரியார் பல்கலைக்கழகத்தில் ராகிங் செய்வதைத் தடுக்க மூன்று ராகிங் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் தருமபுரி, நாமக்கல்,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.

இன்னும் சில வாரங்களில் கோடை விடுமுறைக்கு பின் கல்லூரி வகுப்புகள் தொடங்கும். மேலும், முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்வதைத் தடுக்க,பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தலைமையில் மூன்று ராகிங் தடுப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சேலம் கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் கே. அர்த்தநாரி, சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் பி.கே.செந்தில்குமார், உதவி பேராசிரியர் ஏ. லலிதா, ரோட்டரி சங்க நிர்வாகி மருத்துவர் எஸ்.அசோக், முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் எம்.சங்கீதா, முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர் கே. திவ்ய பிரபு மற்றும் பெற்றோர் தரப்பில் டி.அருள்நாதன், வி. செல்வமணி, உதவி பதிவாளர் ஏ.சரவணன் ஆகியோர் உள்ளனர்.

இதுபோன்று புவியியல் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் எஸ்.வெங்கடேஸ்வரன், நூலகவியல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் முருகன், கணிதவியல் துறை இணைப் பேராசிரியர் பி.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய ராகிங் தடுப்புப் படை அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் தி.பெரியசாமி, விலங்கியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.கண்ணன், ஆங்கிலத் துறை தலைவர் பேராசிரியர் வி.சங்கீதா ஆகியோர் அடங்கிய ராகிங் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் உள்ளவர்கள் மாணவர்களிடம் ராகிங் செய்வதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். அதையும் மீறி ராகிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் பொ.குழந்தைவேல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here