எண்ணெய் நுகர்வு சார்பாக இந்தியா - சீனா பேச்சுவார்த்தை! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

எண்ணெய் நுகர்வு சார்பாக இந்தியா - சீனா பேச்சுவார்த்தை!

எண்ணெய் நுகர்வு நாடுகளின் சங்கத்தை உருவாக்குவது குறித்து சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

எண்ணெய் உற்பத்தி நாடுகளின் சங்கமாக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு இயங்கி வருகிறது. சர்வதேச பெட்ரோலியப் பொருட்கள் விலையை இச்சங்கம் தனது விருப்பத்திற்கேற்ப மாற்றம் செய்து வருகிறது. ஆதலால், எண்ணெய் நுகர்வு நாடுகளுக்கான சங்கத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சீனாவுடன் இந்தியா ஆலோசித்துள்ளது. எண்ணெய் விற்பனையாளர்களிடம் திறம்படப் பேச்சுவார்த்தை நடத்தவும், எண்ணெய் உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்தைக் குறைத்து அமெரிக்க கச்சா எண்ணெய்யை ஆசியாவுக்குக் கூடுதலாகப் பெறவும் எண்ணெய் நுகர்வு நாடுகளின் சங்கம் உதவியாக இருக்கும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற சர்வதேச மின்சக்தி மன்றத்தில், எண்ணெய் நுகர்வு நாடுகளுக்கான சங்கத்தை அமைப்பது குறித்து மத்தியப் பெட்ரோலியத் துறை அமைச்சர் யோசனை வழங்கினார். இதன் பிறகு இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவரான சஞ்சீவ் சிங் இம்மாதத்தில் சீனத் தலைநகர் பீஜிங் சென்று, சீன தேசியப் பெட்ரோலியக் கழகத்தின் தலைவரான வங் யிலினைச் சந்தித்து இவ்விவகாரம் குறித்து ஆலோசித்துள்ளார். எண்ணெய் வள நாடுகளின் (பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு) ஆதிக்கத்தைக் குறைக்க அமெரிக்க கச்சா எண்ணெய்யை அதிகளவில் ஆசியாவுக்குக் கொண்டுவருவது குறித்து இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேவையில் 60 விழுக்காட்டை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு பூர்த்தி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here