11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்களுக்கு வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில் சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கு தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் முதன்முறையாக நடைபெற்ற 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மற்றும் தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவதற்கு வருகிற 18 மற்றும் 19ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் வசிக்கும் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திலும்,தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் மூலமும் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு மார்ச் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 16ஆம் தேதி வரை நடந்தது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 7,070 மேல்நிலைப் பள்ளிகளின் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ, மாணவிகள் எழுதினர். 1,753 தனித் தேர்வர்களும் எழுதினர். மே 30ஆம் தேதி வெளியான பொதுத் தேர்வு முடிவில் 91.3 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக