முடிந்துள்ளது.
அண்மைக்காலமாகவே சீனா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் வர்த்தகச் சிக்கலை அமெரிக்கா எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவுடனான வர்த்தகச் சிக்கல் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் கடுமையான குற்றச்சாட்டையும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்வைத்தார். உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்குப் புறம்பாக இந்தியா அமெரிக்கப் பொருட்களுக்கு அதிகமான வரி விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இந்தியா ஏற்றுமதி செய்யும் சில உலோகப் பொருட்களுக்கு அதிகளவில் அமெரிக்கா வரி விதிப்பதாக இந்தியாவும் குற்றம்சாட்டி வருகிறது. இப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இவ்வாறு இருதரப்புக்கிடையே தொடர்ந்து வரும் வர்த்தகச் சிக்கல்கள் குறித்து இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இந்தியத் தூதரகம் ஜூன் 13 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய அமெரிக்க வர்த்தகம், இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக உறவுகள் குறித்து சுரேஷ் பிரபு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் மார்க் ராபர்ட் வார்னர் மற்றும் ஜார்ஜ் கோர்னைன் ஆகியோருடன் விவாதித்துள்ளார். இருப்பினும் இந்தப் பேச்சுவார்த்தையில் இப்போது நடைபெற்று வரும் இருதரப்பு வர்த்தகச் சிக்கல்கள் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது' என்று கூறப்பட்டுள்ளது.
இருதரப்பு சிக்கல்கள் குறித்துத் தீர்வுகாண இந்திய மூத்த அதிகாரிகள் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளனர் என்று சுரேஷ் பிரபு கூறியுள்ளார். சில மருந்துப் பொருட்களுக்கான விலையை இந்தியா குறைத்ததும் அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை உண்டாக்கியுள்ளதாக அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக