கட்டுமான ஊழியர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கான புதிய வரைவுக் கொள்கையை ஒன்றிய அரசு இறுதி செய்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய தொழிலாளர் துறையாகக் கட்டுமானத் துறை உள்ளது. 2011-12 நிதியாண்டு தேசிய மாதிரி ஆய்வின்படி இந்தியாவில் 5.02 கோடி கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் இவர்களில் 2.86 கோடிப் பேர் வரையில் மட்டும்தான் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நல வாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உண்டாக்கும் வகையில் இலவசக் காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்கவுள்ளதாகவும், அதற்கான வரைவறிக்கையை ஒன்றிய தொழிலாளர் துறை அமைச்சகம் தயாரித்து வருவதாகவும் அண்மையில் ஒன்றிய அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த வரைவறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டுமான ஊழியர்களிடமிருந்து ஆண்டொன்றுக்குத் தோராயமாக 477.10 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியதையடுத்து புதிய நெறிமுறைகளை ஒன்றிய அரசு வகுத்து வருகிறது. தேசிய மாதிரி ஆய்வறிக்கையின் படி நாட்டின் நான்கு மாநிலங்களில் மட்டும்தான் 2000 ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்யப்படுகிறது. சுமார் 20 மாநிலங்களில் 1000 ரூபாய்க்குக் குறைவாகத்தான் வசூல் செய்யப்படுகிறது. குறைந்தபட்சமாக மணிப்பூரில் 113.86 ரூபாயும், ஜார்கண்டில் 134.82 ரூபாயும், தமிழ்நாட்டில் 135.84 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் கட்டுமான ஊழியர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திருமணச் செலவுகள், ஓய்வூதியம் மற்றும் மகப்பேறு செலவுகள் போன்றவற்றுக்கு ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக