நடுநிலைப்பள்ளிகளில் புவியியல், அறிவியல் மற்றும் கணிதபாடங்களுக்கு டேப்லெட்* - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

நடுநிலைப்பள்ளிகளில் புவியியல், அறிவியல் மற்றும் கணிதபாடங்களுக்கு டேப்லெட்*


நடுநிலைப்பள்ளிகளில் புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு டேப் பயன்படுத்துவது குறித்த பயிற்சிக்கு, ஆசிரியர்களை அனுப்ப சிஇஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடப்பாண்டு, 1, 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கற்றல், கற்பித்தல் முறைகளில், பல்வேறு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள உயர்வகுப்புகளுக்கு, மின்னணு வடிவில் பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளது.

புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கென, பிரத்யேக வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை கற்பிக்க மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நடுநிலைப் பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்படவுள்ளது.

டேப்லெட் மூலம் வகுப்பெடுக்க பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரத்யேக பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

முதற்கட்டமாக, மாவட்ட அளவில் ஒரு ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் ஒரு நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு சென்னையில் வரும் 19ம் தேதி, மாநில அளவிலான பயிற்சி வழங்கப்படுகிறது.

இதில் கலந்து கொள்ளும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை அனுப்புவதுடன், கட்டாயம் அவர்களை கலந்து கொள்ள செய்ய வேண்டும் என அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here