காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து! - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ரத்து!

காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2 ஆண்டுகளாகவும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி ஒரு ஆண்டுக்கு மேலாகவும் காலியாக இருந்தன. இதையடுத்து கடந்தாண்டு மே மாதம் 27ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக செல்லதுரையும், சென்னை பல்கலை துணை வேந்தராக துரைசாமியும் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார். அதில், ”பல்கலைக்கழங்களில் துணை வேந்தராகப் பதவியேற்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் கவுன்சிலின் டீனாகப் பணியாற்றிய செல்லதுரை புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை ரத்து செய்ய உத்தரவிடவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூன் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை வேந்தர் செல்லதுரை நியமனம் செல்லாது என்றும் வேறு குழுவை அமைத்து பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரை தேர்வு செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here