முறையாக விசாரிக்காமல் ஆவணங்களைப் பதிவு செய்த சிறப்பு தாசில்தார், சார் பதிவாளருக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜமீன் பல்லாவரத்தில் தங்கமுருகப்ப நாயக்கர் என்பவருக்குச் சொந்தமான 53 சென்ட் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிக்க முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கல்யாணி, லட்சுமி நரசிம்மன், கார்த்திகேயன் ஆகியோர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி ராமதிலகம் முன் இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களுக்கு எதிராகப் புகார் அளித்த சந்திரசேகரன் தான் போலி ஆவணங்களைத் தயாரித்து பதிவு செய்துள்ளதாகவும், முறையாக விசாரணை நடத்தாமல் பல்லாவரம் சிறப்பு தாசில்தாரர் மற்றும் பல்லாவரம் சார் பதிவாளர் ஆகியோர், ஆவணங்களைப் பதிவு செய்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இது தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, மனுதாரர்கள் மூவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், முறையாக விசாரணை நடத்தாமல் ஆவணங்கள் பதிவு செய்த சிறப்பு தாசில்தார், சார் பதிவாளர் மீதான விசாரணை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய மத்திய குற்றப் பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக