'அரசு பள்ளிகளை மூடக்கூடாது' மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி - STUDENTMALAR

Breaking

.

1

Post Top Ad

'அரசு பள்ளிகளை மூடக்கூடாது' மார்க்சிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

மாணவர் குறைவை காட்டி அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கை கைவிட வேண்டும்' என, மார்க்சிஸ்ட் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியதாவது: மாணவர் எண்ணிக்கை50க்கும் குறைவான 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர் எண்ணிக்கை குறைய காரணத்தை ஆராய்ந்து, அதிகரிக்கச்செய்ய வேண்டும்.கேரளாவில் சட்டசபை தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளி உருவாக்கி தனியார் பள்ளிகளை விட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியுள்ளனர். இதனால் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் மாறிவருகின்றனர். இதுபோல் இங்கும் அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும்.அ.தி.மு.க. அரசில் எல்லாதுறையிலும் ஊழல் மலிந்துள்ளது. லோக்ஆயுக்தா சட்டத்தை நடப்பு கூட்டத்தொடரிலே கொண்டு வர வேண்டும் என்றார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உடனிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Subscribe Here