இது தொடர்பாக,டெல்லியில் நேற்று (13.06.2018) பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:
உச்ச நீதிமன்றம் பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று கூறியிருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவு மத்திய அரசுக்கு மட்டுமின்றி மாநில அரசுகளுக்கும் பொருந்தும்.
இது தொடர்பான ஒரு குழப்பம் இருந்து வந்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு மாநிலங்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி இருந்துவந்தது. இப்போது இது தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. மத்திய அரசும் மாநில அரசுகளும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டிற்கான ஒரே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இதற்காக, ஊழியர் துறையிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக